வேளாண் பணிகளுக்கான உரங்களை சந்தைப்படுத்தும் இப்கோ எனப்படும் (இந்திய விவசாயிகள் கூட்டுறவு நிறுவனம்) நானோ யூரியாவை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த 500 மில்லி நானோ யூரியா 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த 500 மில்லி யூரியா விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் 45 கிலோ யூரியாவுக்கு சமமானது என்பதால் விவசாயிகளுக்கு இந்த யூரியா மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
மேலும் இது விவசாயிகளுக்கான சாகுபடி செலவை குறைப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும்.
இதுகுறித்து ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா,
இந்திய விவசாயத்தில் நானோ யூரியாவின் அறிமுகமானது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இதனால் வழக்கமாக பயன்படுத்தும் யூரியாவின் அளவு குறையும் விவசாயிகளின் உர மானியத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய அளவிலான தொகையும் அரசுக்கு சேமிப்பாகும் என்றார்.