இந்த கொரோனா பரவல் சூழலிலும் வங்கிகள் ஈட்டிய லாபம்
பேங்க் ஆஃப் பரோடா
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, கடந்த மார்ச் காலாண்டில் ரூ.21, 532.91 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்ட அறிக்கை
கடந்த 2020-21 நிதியாண்டில் வங்கி செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய தனிப்பட்ட வருமானம் ரூ.21, 532.91 கோடி.
தற்போதைய நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.86,300 98 கோடியிலிருந்து ரூ.82,859.50 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் வங்கி நிகர அளவில் ரூபாய் ரூ.1,047 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
அதேசமயம் 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி நிகர லாபமாக ரூ.506.59 கோடி
கடந்த நிதியாண்டில் நிகரலாபம் ரூ.546.18 கோடியிலிருந்து 52 சதவீதம் உயர்ந்து ரூ. 898 கோடியை எட்டியது என பேங்க் ஆப் பரோடா எட்டியுள்ளது.
தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி மார்ச் காலாண்டில் செயல்பாட்டின் மூலம் நிகரலாபம் இரண்டு மடங்கு வளர்ச்சியை கண்டது.
தனியார் துறையை சார்ந்த இந்த வங்கி பங்குச்சந்தையிடம் அளித்த அறிக்கையில்,
கடந்த நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ஈட்டிய வருமானம் ரூ.242.18 கோடி.
இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ. 280.98 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
நிகரலாபம் ரூபாய் 2.60 கோடியிலிருந்து இரு மடங்கு உயர்ந்து ரூ.5.28 கோடி ஆனது.
இருப்பினும் முந்தைய டிசம்பர் காலாண்டில் ஈட்டிய லாபம் 11.81 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 55.3 சதவீதம் குறைவாகும்.
2020-21 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.65.78 கோடியில் இருந்து ரூ 43.5 சதவீதம் சரிவடைந்து ரூ.37.19 கோடியானது.
மொத்த வருவாயும் ரூ 1,100.44 கோடியில் இருந்து 1,072.23 கோடியாக குறைந்துள்ளது.
வராக்கடன் 5.90 சதவீதத்திலிருந்த 9.23சதவீதம், நிகர வாராக்கடன் 1.55 சதவீதத்திலிருந்து 4.76சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.