1000 ஊழியர்களை வெளியேற்றும் ஓலா..
கூகுள், மைக்ரோசாப்ட் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறப்பட்ட நிலையில் தற்போது 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1000 ஊழியர்கள் பணிநீக்கம்: ஓலா தனது மின்சார இயக்கம் வணிகத்திற்கான பணியமர்த்தலை அதிகரித்தாலும், சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 6 அன்று பணி நீக்க நடவடிக்கை தொடங்கியதாக தெரிகிறது. ஆட்குறைப்பு எண்ணிக்கை சுமார் 400-500 என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இறுதி எண்ணிக்கை சுமார் 1,000 ஐ தொடக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மின்சார கார்களில் கவனம்: ஓலா நிறுவனம் முழுமையாக மின்சார இயக்கம் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மொபிலிட்டி, ஹைப்பர்லோகல், ஃபின்டெக் மற்றும் அதன் பயன்படுத்தப்பட்ட கார்கள் வணிகங்களை அதிகப்படுத்த தீவிர முயற்சி செய்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தானாக முன்வந்து ராஜினாமா: இதனால் மற்ற துறையில் உள்ள ஊழியர்கள் சுமார் 1000 பேர்களை நீக்க ஓலா முடிவு செய்ததாகவும், பணிநீக்க நடவடிக்கைக்கு இலக்கானவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஓலாவின் டுவிஸ்ட்: பெங்களூரை தளமாகக் கொண்ட ஓலா நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரி பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதால் ஓலா கார்களுக்காக மட்டும் சுமார் 800 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
ஓலா பணியாளர்கள் 1000 பேர்களை விடுவித்தாலும், அதிகமான நபர்களை வேலைக்கு எடுக்கிறது என்பது ஓலாவின் டுவிஸ்ட்டாக உள்ளது.
500 தொழிலாளர்களுக்கு வேலை ஆகஸ்ட் மாதம் செயல்படத் தொடங்கும் பெங்களூரில் வரவிருக்கும் செல் பேட்டரி செல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிக்காக சுமார் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகவும், 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் பிஎச்டி படித்தவர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும் ஓலா நிறுவனம் கூறியது.