கலைநயத்துடன் கூடிய செட் ஒர்க் செய்யும் திருச்சி மாடர்ன் ரூபிங் நிறுவனம்!
சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி பீமநகர் பகுதியில் இயங்கிவருகிறது மாடர்ன் ரூபிங் நிறுவனம். இங்கு சிறந்த முறையில் அனைத்து வகையான செட் ஒர்க்ஸ், ஷட்டர் ஒர்க்ஸ், சில்வர், அலுமினியம் வேலைப்பாடுகள் செய்யும் SS ஒர்க்ஸ் எனப்படும் அனைத்து வகையான வேலைகளும் திறம்படவும், நேர்த்தியாகவும், குறித்த நேரத்தில் செய்து தருவதால் வாடிக்கையாளர்கள் வட்டம் பெருகி திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களிலும் தொழில் செய்யும் திறன் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.
இதுகுறித்து, மாடர்ன் ரூபிங் உரிமையாளர் முகம்மது இக்பால் கூறும்போது, கடந்த 10 வருடங்களாக சிறந்த முறையில் செட் ஒர்க்ஸ் அமைத்து தருவதால் வாடிக்கையாளர்களை மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
முக்கொம்பு அணை, கல்லணை, கரூர் மாயனூர் டேம் ஆகிய பகுதிகளில் லேபர் ஷெட் எனப்படும் பணியாளர்கள் தங்குமிடம் சிறப்பான முறையில் அமைந்து தந்துள்ளோம்.
மேலும் வணிக நிறுவனங்களுக்கு நிரந்தர செட் ஒர்க்ஸ் சிறந்த முறையில் அமைத்து தந்து வருகிறோம். ஒரே நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் எங்கள் குழுவினர் பணி செய்து வரும் நிலையில் எங்கள் திறன் மீது நம்பிக்கை கொண்டு பணி வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், 60 ஆயிரம் சதுரஅடி, 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கூட பணிகள் சிறப்பாக செய்து தந்துள்ளோம் என்றார். மேலும், கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் 96004 89356 என்ற எண்ணில் மாடர்ன் ரூபிங் நிறுவனத்தை அழைக்கலாம் என்றும் தெரிவித்தார்.