ஊக்கத் தொகையுடன் அழிக்கப்படும் பழைய வாகனங்கள்..!
சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் ஒரு முகமாக சாலையில் செல்லும் பழைய வாகனங்களை அழிப்பதேன முடிவெடுத்துள்ள மத்திய அரசு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இந்த புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் பழைய வாகனங்களை அழிக்கும்போது ஏற்படும் இழப்புக்காக ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருப்பின் 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் வணிகரீதியான போக்குவரத்து வாகனங்களாக இருப்பின் 15 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அதே வேளையில் இந்தச் சலுகை தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும், போக்குவரத்து வாகனங்களாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரையும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.