Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

“அனைவருக்கும் வீடு.. அதுவே எங்கள் இலக்கு” திருச்சி UKR புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.ரஞ்சித்குமார் சிறப்புப் பேட்டி

“அனைவருக்கும் வீடு.. அதுவே எங்கள் இலக்கு” திருச்சி UKR புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.ரஞ்சித்குமார் சிறப்புப் பேட்டி

இந்தியாவில் அதிகம் பணம் புழங்கும் துறைகளில் முதன்மையானது ரியல் எஸ்டேட் துறை. கடந்த 2007-2010ம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை கொடி கட்டிப் பறந்தது. அடுத்து வந்த 2011 அதிமுக ஆட்சி கால தொடக்கத்தில் இடத்திற்கான வழிகாட்டி மதிப்பு  (GUIDELINE VALUE)  அதிகரித்தது. இதனால் ரியல் எஸ்டேட் துறை தடுமாறத் தொடங்கியது.

தொடர்ந்து 2016ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, அதையடுத்து 2017ல் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக ரியல் எஸ்டேட் துறை பெருமளவு சரிந்தது. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததையடுத்து மனைகளில் முதலீடு செய்யும் சூழல் இல்லாமல் போனது.

மேலும்  பத்திரப் பதிவு கட்டணம் உயர்த்தப் பட்டதைத் தொடர்ந்து சுமார் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ரியல் எஸ்டேட் துறையிலிருந்தே வெளியேறி விட்டனர். கடன் பெற்று இத்தொழிலை தொடங்கியவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்ட அவலமும் அரங்கேறியுள்ளது. இப்படி பல்வேறு காலகட்டங்களில் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்த ரியல் எஸ்டேட் துறைக்கு பெருத்த அடியாக கொரோனா பாதிப்பு அமையும் என கருதப்பட்டது. ஆனால் நிகழ்வோ வேறுமாதிரியாக மாறியது.

கொரோனா ஊரடங்கு, ஒரு சாராரை வருவாய் இழப்பிற்கு உள்ளாக்கியது என்றால் மற்றொரு சாராரின் செலவினங்கள் குறைந்து, கையில் இருந்த உபரி பணம் தங்கம், மற்றும் வீட்டுமனைகளில் முதலீடு செய்யத் தூண்டியது.

சர்வதேச நிலவரங்களின் அடிப்படையில் தங்கத்தில் செய்யும் முதலீடு என்பது நிச்சயமற்றதாக மாறி வருகிறது. ஆனால் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்பு வசதிகள் பெருகும் என்ற நோக்கில், மனைகளின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது,

கொரோனா காலமானது அனைத்து தொழில்களையும் வெகுவாக பாதிக்க வைத்ததோடு வீடுகளில் முடங்கிய சாமானிய மக்களை பெருமளவு சிந்திக்கவும் வைத்தது. “சொந்த வீடு கட்டாயம் வேண்டும்“ என்பது தான் அந்த சிந்தனை.

கொரோனா காலத்திற்கு பின்பு ஹவுசிங்.காம் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், ரியல் எஸ்டேட் துறை தான் முதலீட்டுக்குச் சிறந்த இடம் என 35 சதவீதத்தினரும், 28 சதவீதத்தினர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதாகவும்  கூறியுள்ளனர். அதற்கேற்றாற் போல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.  இந்நிலையில் எதிர்காலத்தை சிந்திக்கும்  சாமானிய மக்களுக்கு, மனை, வீடு மட்டுமே பாதுகாப்பு தரக்கூடிய சரியான முதலீடாகவும் சிறந்த முதலீடாகவும் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. அதிகளவிலான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கி வரும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள இந்த தேக்கத்தை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு சலுகை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன் வாயிலாக 2021ல் ரியல் எஸ்டேட் துறை சிறப்பான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது குறித்து ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் யுகேஆர் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.ரஞ்சித்குமார் அவர்களை சந்தித்து பேசினோம்.

 ரியல்எஸ்டேட் துறை கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருப்பதாக கூறப்படுகிறதே உண்மையா..? என்ன காரணம்..?

உண்மை தான். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அதிகரிப்பு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரியல் எஸ்டேட் துறை பாதிப்படைந்தது. ஆனால் கொரோனா காலத்திற்கு பின்பு இந்நிலை தொடரவில்லை. மக்களிடையே நிலவிய பாதுகாப்பு இன்மை உணர்வு பலரையும் யோசிக்க வைத்தது. எதிர்காலத்திற்கான சேமிப்பிற்கு ஆதாரமான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என பலரையும் உணரச் செய்தது. மேலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் கொரோனா காலத்தில் வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பலருக்கும் சொந்த வீடு என்ற எண்ணம் அதிகரித்தது. இதை உணர்ந்தே தற்போது, ‘அனைவருக்கும் வீடு.. அதுவே எங்கள் இலக்கு’.. என்ற எண்ணத்துடன், வீட்டுமனை விற்று வந்த நாங்கள் தற்போது, வீடுகட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

Trichy UKR புதிய திட்டம்

 கொரோனா பாதிப்பு ரியல் எஸ்டேட் துறையை பாதிக்க வில்லையா..?

தொழிலில் ஏற்ற- இறக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதே வேளையில் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று விட்டால் அவர்கள் எந்நிலையிலும் நம்முடன் இருப்பார்கள் என்பதே நிதர்சனம். கடந்த 2020—21ம் ஆண்டில், அதாவது கொரோனா காலகட்டத்திலும் எங்கள் வர்த்தகம் நல்ல வளர்ச்சிப் பாதையில் தான் இருந்தது.

பொதுவாக நிறுவனம் குறித்து நாம் செய்யும் விளம்பரங்கள் நம் இருப்பை மட்டுமே வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தும். நமது வாடிக்கையாளர்களிடம் நாம் பெறும் நன்மதிப்பே நம்மை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும். ரியல் எஸ்டேட் துறையில் கடந்த பத்தாண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து வரும் நிறுவனங்கள் மட்டுமே இன்றளவும் தாக்குப்பிடிக்கிறது. அந்த வகையில் நாங்கள் பெற்ற நன்மதிப்பே எங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்கிறது.

 ரியல் எஸ்டேட் துறைக்குள் நீங்கள் வந்து எவ்வளவு ஆண்டுகளாகிறது?

ரியல் எஸ்டேட் துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. தொடக்கத்தில் பார்ட்னர்ஷிப்பாக இத்தொழிலை செய்து வந்தேன். பின்னர் யுகேஆர் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் தனியாக தொழில் தொடங்கி சுமார் 10 ஆண்டுகளாக ஆகிறது. சரியான விலையில் மனை வாங்கவும், தேவையான நேரத்தில் அம்மனையை சரியான விலைக்கு விற்கவும் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்தே குறைவான விலையில் மக்களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இத்தொழிலில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

வீடு கட்டுவது, முதலீடு இவ்விரண்டில் எதன் அடிப்படையில் பொது மக்கள் மனை வாங்குகின்றனர்?

பெரும்பாலானோர் வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மனை வாங்குகின்றனர். ஆனால் பின்னர் அவர்களின் பொருளாதார தேவைக்கு ஏற்ப அதாவது, பிள்ளைகளின் கல்வி கட்டணம், திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனைகளை விற்கின்றனர்.

உங்களிடம் மனை வாங்குபவர்களின் மனைகளை நீங்களே  விற்றுத் தருகிறீர்களா..?

எங்களிடம் மனை வாங்கி இரண்டு ஆண்டுகள் கழித்து அம்மனைகளை  நாங்களே விற்றுத் தருகிறோம்.

 இது வரை எவ்வளவு மனைகளை விற்றுள்ளீர்கள்.?

எங்களிடம் 6000 வாடிக்கையாளர்களுக்கு வீட்டுமனைகளை விற்றுள்ளோம். தற்போது தான் வீடு கட்டும் திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறோம். “அனைவருக்கும் வீடு.. அதுவே எங்கள் இலக்கு” என்ற தாரக மந்திரத்துடன் தான் இந்த திட்டத்தில் இறங்கியுள்ளோம்.

 மனை வாங்கும் போது பொது மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

மனை வாங்கும்முன், அதற்கான ஆவணங்களை உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரிடம் காண்பித்து சரிபார்க்க வேண்டும்.  நீங்கள் வாங்கப்போகும் மனை, குறித்து கடந்த 30 வருடங்களுக்கான, மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும். அத்துடன் சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

நிலப்பத்திரம் அடமானத்திலோ அல்லது நீதிமன்ற வழக்குகளிலோ இல்லை என்பதை உறுதி செய்யவும். வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்ப்பது அவசியம். வில்லங்கச் சான்றிதழின் விவரங்களை ஆன்லைனில் ஒருமுறை சரிபார்ப்பதும் அவசியம்.

பெரும்பாலோர் ஈசி  (ENCOMBERANCE CERTIFICATE) போட்டுப் பார்த்தால் போதும் என்ற அளவில் இருப்பது போதுமானதல்ல. மனை விற்பவர்கள் சிலர் தங்களது அசல்(ORIGINAL) பத்திரத்தை தனியாரிடம் அடமானம் வைத்து இருப்பார்கள். வங்கியில் அடமானம் வைத்து இருந்தால் இதில் தெரிந்துவிடும். ஆனால் தனியாரிடம் அடமானம் வைத்து இருக்கும்போது அதை கண்டறிவது இயலாத காரியம். நாம் பத்திரப் பதிவிற்கு பின்பு அசல் பத்திரம் கேட்கும் போது தான் உண்மை தெரியவரும்.

எனவே அசல் பத்திரத்தை வாங்கி பார்ப்பது முக்கியம். தற்போதைய நில உரிமையாளரின் நம்பகத்தன்மையை, நில வருவாய்த்துறைப் பதிவுகளை ஆன்லைனில் பார்க்கும் வசதி மூலமும் சரிபார்க்கலாம். மேலும் மனையானது விவசாய நிலம் அல்லாத குடியிருப்புக்கான மனையாக மாற்றப் பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். 2011க்கு பின்பு பத்திரப்பதிவில், வீடியோ பதிவு நடைமுறையில் உள்ளதால் ஒரே இடத்தை இருவருக்கு விற்கும் தவறுகள் (DOUBLE ENTRY) நடப்பது தற்போது இல்லை.

 மீண்டும் ரியல் எஸ்டேட் துறை பழைய நிலைக்கு திரும்ப என்ன மாதிரியான நடவடிக்கைகளை இந்த அரசு செய்துதர வேண்டும்..?

கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்தார். அதை மேலும் குறைத்தால் நன்றாக இருக்கும். மேலும் பத்திரப் பதிவு செலவு 7+4 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அவற்றை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீட்டுமனை வாங்கிட அரசு வங்கிகளில் பெரும்பாலும் கடன் தருவதில்லை. பெரும்பாலோர் தனியார் வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். வீட்டுமனை வாங்கிட பொதுத் துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் பெரும்பாலானோர்க்கு சொந்த வீடு கனவு நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

 திருச்சியில் பணசுழற்சிக்கு காரணம்….

திருச்சி மாவட்டத்தை மட்டுமே கணக்கில் கொண்டால் சுமார் ஒரு லட்சம் பேர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மூலம் தான் திருச்சி மாவட்டத்தில் சுமார் 40-45 சதவீத பணசுழற்சி ஏற்படுகிறது. இதன் மூலம் திருச்சி மாவட்ட பொருளாதாரமும் உயர்ந்து காணப்படுகிறது. மனிதனுக்கு அத்தியாவசியமான, “உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம்..”. இவற்றை குறைவின்றி தருவதே ஒரு நல்லாட்சியின் இலக்கணமாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை முடங்கிப் போனதால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு, இருக்க இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

 மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க செய்ய வேண்டியது..?

எனவே, பொருளாதாரம் செழிக்க ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் பெற வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்கான நடவடிக்கைகளை இந்த ஆட்சி மேற்கொண்டால், அதன் மூலம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதாரம் உயர்வடையும். இதன் மூலம் கிடைக்கும் நன்மதிப்பு, அடுத்த முறையும் மக்கள் திமுகவையே ஆட்சியில் அமர வைப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

 புதிதாக SS திட்டம் பற்றி கூறுங்கள்..?

மாதந்தோறும் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 என இரு திட்டங்கள் உள்ளது. 4 மற்றும் 3 ஆண்டுகள் தொடர்ந்து இந்த திட்டத்தில் இணைந்து பணம் கட்ட வேண்டும். திட்டத்தின் நிறைவில் கட்டிய பணத்தை விட மூன்று மடங்கு மதிப்புள்ள மனையினை அவர்களுக்கு வழங்க உள்ளோம். அது தான் அந்த SS திட்டம்.

எங்கள் நிறுவனம் வளர உறுதுணையாக இருப்பது எங்களுடன் பணியாற்றும் ஊழியர்கள் தான். அவர்களில் சேகர், ஸ்ரீதர் என இருவரும் இணைந்த வடிவமைத்த திட்டம் தான் அந்த திட்டம். சிறப்பான அந்த திட்டத்தை வடிவமைத்த அவர்கள் பெயரிலேயே SS  திட்டம் என அதற்கு பெயர் சூட்டியுள்ளேன்.

 மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது உங்களிடம் மனை வாங்குவதில் உள்ள சிறப்புகள் என்னென்ன..?

பொதுவாக அங்கீகாரம் பெற்ற மனைகளையே விற்பனை செய்கிறோம். பாதுகாப்பான சுற்றுச்சுவர், 24 மணி நேர பாதுகாப்பு வசதி, 75 அடி ஆழத்தில் கிடைக்கும் குடிநீர் வசதி, தரமான தார்ச்சாலை, மின் வசதி, ஒரு மனைக்கு இரண்டு மரக்கன்றுகள் இவைகளுடன் குறிப்பாக இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி பெறும் மனைகளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்வது எங்களின் சிறப்பம்சமாகும்.  முன்பு சொன்னது போல் எங்களிடம் மனை வாங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அம்மனைகளை அவர்களின் தேவையை கருதி நாங்களே விற்றும் தருகிறோம். அதாவது, ‘விற்பனைக்கு பிந்தைய சேவை’ என்பார்களே அது போல் எங்களது இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக அமைகிறது.

 தற்போது எந்தெந்த இடங்களில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறீர்கள்.?

திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகில் ஸ்ரீகணேஷ் நகர், திருச்சி, டிஎன்பிஎல் காகித ஆலைக்கருகில் (600 மீட்டர் தொலைவில்) ஆபிசர்ஸ் டவுன், திருச்சி–சென்னை நெடுஞ்சாலையில் ஈச்சம்பட்டி அருகில் சக்ரா கார்டன் உள்ளிட்ட இடங்களில் மனைகள் விற்பனை நடைபெற்று வருகின்றன.

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்.ஐ.சி. காலணி, திருவரம்பூர் குமரேசபுரம், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகில், ஓஎஃப்.டி. சாலையில் மற்றும் மணப்பாறையில் யுகேஆர் புரமோட்டர்ஸ் கிளை அலுவலகம் அமைந்துள்ளது. மிஷிளி (9001-2015) தரச்சான்றிதழ் பெற்ற யுகேஆர் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில்  மனை வாங்க விரும்புவோர் மற்றும் அந்நிறுவனத்தின் SS  திட்டத்தில் இணைய விரும்புவோர் 97900 29335 மற்றும் 88707 33399 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

– எஸ்.கோவிந்தராஜன்

படங்கள் : அபிஅழகி

Leave A Reply

Your email address will not be published.