உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டின் படத்தை OLX, Quikr, Indiamart போன்ற தளங்களில் உங்களை பற்றி பதிவேற்றி விளம்பரம் செய்ய வேண்டும். பழைய நாணய சேமிப்பாளர்கள் உங்களை தொடர்புகொண்டு விலை கேட்பார்கள். அவர்களிடம் விலைபேசி நல்ல விலைக்கு அந்த ஒரு ரூபாய் நோட்டை விற்றுவிடலாம்.
அது சரி.. எந்தமாதிரியான ரூபாய் நோட்டு விற்கப்படுகிறது. அந்த ஒரு ரூபாய் நோட்டின் சிறப்பு அம்சங்கள் என்ன என கேள்வி எழுகிறது தானே..?
இந்த ஒரு ரூபாய் நோட்டு 1917ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அச்சடிக்கப்பட்டது. அதில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படம் பதிக்கப்பட்டிருக்கும். இந்த நோட்டு விநியோகம் 1926ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நோட்டு தற்போது மிக மிக அரிதானதாக இருக்கிறது. எனவே, இதற்கான டிமாண்ட் தாறுமாறாக உயர்ந்துள்ளது.