ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் ஆப்பு..
போலியான சலுகை அறிவிப்புகளை நம்பி போலியான செயலிகளில் மூலம் முன்பணம் அல்லது உங்களது வங்கி விவரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.
உதாரணமாக, “தங்களுடைய வங்கி கணக்கில் ரூ.4,25,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை *56n.me/5jask4* என்ற Link-ஐ கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்ற குறுஞ்செய்தி வரும். அத்தகைய குறுஞ்செய்தி தங்களது அலைபேசி எண்ணிற்கு வந்தால் அந்த Link-ஐ திறக்க வேண்டாம்.
அந்த Link-கினை தொடுவதன் மூலம் உங்கள் தொலைபேசி எண்ணானது ஊடுருவப்பட்டு, உங்களது வங்கி கணக்கில் உள்ள விபரங்கள் மற்றும் பணம் அனைத்தும் இணையவழி மூலம் திருடப்படுகிறது. குறிப்பாக இதில் உள்ள வில்லங்கத்தை சரிவர தெரியாமல் பெரும்பாலும் மூத்த குடிமக்களே ஏமாறுகிறார்கள். எனவே மூத்த குடிமக்கள் இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.