செல்போன் டவர் அமைப்பதாக மோசடி..!
மொபைல் கோபுரம் அமைப்பதற்கு மத்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக முன்பணம் செலுத்துவதற்கு எந்த ஒரு மின்னஞ்சலோ அல்லது குறுஞ்செய்தியோ தங்களது தொலைபேசிக்கு அனுப்பப்பட்டால் அதை நம்பி ஏமாற வேண்டாம். மத்திய அரசின் ஜிஸிகிமி அமைப்பானது தனிப்பட்ட நபருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில்லை.
இது போன்ற பல்வேறு வகையில் மோசடிகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதால் திருச்சி வாழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்து அலார்ட் செய்து வருகின்றனர்.