திருச்சி தில்லை நகரில் லக்ஷ்ணா யோகா ஸ்டுடியோ திறப்பு விழா!
திருச்சி தில்லை நகர் 7-வது கிராஸ் கிழக்கு லக்ஷ்ணா யோகா ஸ்டுடியோ என்ற யோகா பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அழகு கலை மையம், தையல் பயிற்சி மையம், பேஷன் டிசைனிங் வகுப்புகள் ஆகியவை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வந்த அனிதா டேவிட் என்பவர் அடுத்த கட்ட முயற்சியாக யோகா பயிற்சி மையத்தினை தொடங்கியுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் வசந்தி தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, ஆல்பா கல்வி நிறுவனங்களின் முதல்வர்களில் ஒருவரான ராதிகா, வழக்கறிஞர் சத்யபாமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த யோகா மையத் திறப்பு விழா குறித்து உரிமையாளர் அனிதா டேவிட் கூறும் பொழுது, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனி தனி பிரிவுகளாக இந்த யோகா மையத்தில் வகுப்புகள் நடத்துகிறோம் .சேவை நோக்கில் குறைந்த கட்டணமே வசூலிக்கிறோம்.
மிகச் சிறப்பு வாய்ந்த விவேகானந்தா யோகா மையத்தின் மாஸ்டர்கள் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீ சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். ரெகுலர் கிளாசஸ் எனப்படும் சராசரி வகுப்புகள் நீங்கலாக மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, சைனஸ் பிராப்ளம் ஆகியவற்றிற்கு சிகிச்சை முறை யோகாவும் கற்றுத் தருகிறோம் என்று தெரிவித்தார்.