காலாவதியான பாலிசிகளுக்கு எல்ஐசி வழங்கும் வாய்ப்பு..!
எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் காலாவதியான பாலிசியை (lapsed policy) புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்குகிறது இதற்காக எல்ஐசி நிறுவனம் ‘Special Revival Campaign’ என்ற முகாமை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 22ஆம் தேதி வரை நடத்தி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தாமல் தவறவிடப்பட்ட, காலாவதியான பாலிசிகளை அக்டோபர் 22ஆம் தேதி வரை இம்முகாமிற்கு சென்று புதுப்பித்துக்கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு நிவாரணமும், ஆதரவும் வழங்கும் வகையில் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நெருக்கடி காலத்தை கருத்தில் கொண்டு, Term Assurance, High-Risk திட்டங்களுக்கான தாமதக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது. பாலிசியை புதுப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள எல்ஐசி கிளையை அணுகலாம்.