திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் சமுதாய வளப் பயிற்றுனா்களுக்கான 5 நாள் இயற்கை வேளாண் பயிற்சி நடந்தது.
பூச்சியியல் துறை தலைவா் அம்பேத்கா் பயிற்சியை தொடங்கி வைத்தப் பேசினார்.
உழவியல் துறை தலைவா் ரமேஷ், இயற்கை வேளாண்மையில உற்பத்தி செய்யப்படும் உணவின் நன்மைகள், தேவையான இடுபொருட்கள் தயாரிப்பது, இணைப் போராசிரியர் ராதிகா, ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றம் மண்புழு உரம் தயாரித்தல், மண்ணியல் துறை தலைவா் பாஸ்கா் சுற்றுபுறச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினா்.
சாம்பியன் விவசாயிகள் தொட்டியம் பத்மநாபன், பிச்சாண்டார் கோவில் ஸ்டீபன் கென்னடி, குட்டப்பட்டு தண்டபாணி, திருவானைக்காவல் ஹரிகிருஷ்ணன், நடராஜபுரம் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனா்.
கல்லூரி முதல்வா் வன்னியராஜன் விவசாயிகளுக்கு சான்றிதழ், இடுபொருட்களை வழங்கிப் பேசினார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலா் நிவேதா, பூமாதேவி நன்றி கூறினா்.
ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா் ராதிகா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.