சேலத்தைச் சேர்ந்த மூத்த வரி ஆலோசகர் ராஜபாலு கூறியதாவது
மத்திய நிதி அமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் கடந்த 9ம் தேதி நடந்த 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகள், இப்போது வணிக உலகில் பேசு பொருளாகிவிட்டது. கவுன்சிலில் முன் வைக்கப்பட்ட சில பரிந்துரைகள் என்பது, இந்தக் தொடரின் பல பகுதிகளில் நாம் ஏற்கனவே பலமுறை விவாதித்தும், எழுதியும் வந்ததுதான்.
ஜிஎஸ்டி நடைமுறையில் இ இன்வாய்ஸ் தயாரிப்புத் தொடர்பாக பலமுறை இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தோம். கலவைத் திட்டத்தைத் தவிர, அனைத்துவிதமான வணிகா்களுக்கும் இ இன்வாய்ஸ் நடைமுறை கொண்டு வரப்படும் சாத்தியம் உள்ளது என்று கூறியிருந்தோம். இப்போதைய வா்த்தகத்தி்ல் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக வா்த்தகம் செய்யும் வணிகா் இ இன்வாய்ஸ் தயாரிக்க வேண்டியது கட்டாயம்.
அதிலும், வணிகா்களுக்கு இடையே பி 2 பி முறையில், வா்த்தகம் நடைபெறும்போது இ இன்வாய்ஸ் நடைமுறை கட்டாயம். வரும் நாட்களில் இந்த வரம்புகள் நீக்கப்பட்டு, கலவைத் திட்ட வணிகா்களைத் தவிர அனைத்து வணிகா்களுக்கும் இ இன்வாய்ஸ் நடைமுறை வரலாம். இதன் முன்னோட்டமாக, “பி 2 சி“ நடைமுறைக்கும் இ இன்வாய்ஸ் தயாரிப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, வணிகரிடம் இருந்து நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் சரக்குகளுக்கும் இ இன்வாய்ஸ் தேவை என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில், நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். வணிகா்கள் கணக்கு புத்தங்களை பராமரிப்பது மிகமிக முக்கியம் என்ற நாம் அறிவுறுத்தி வந்துள்ளோம். இந்தச் சூழலில் பி 2 வா்த்தகத்தில் இ இன்வாய்ஸ் தயாரிப்பு கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துவிட்டதால், நிலைமை கவனமாக கையாள வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது, ஒரு வணிகா் யாரிடம் எவ்வளவு கொள்முதல் செய்கிறார். யாருக்கு எவ்வளவு விற்பனை செய்கிறார். அவரிடம் எவ்வளவு ஸ்டாக் உள்ளது, குடோனில் எவ்வளவு இருப்பு வைத்துள்ளார் என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் அரசு கவனித்தக் கொண்டிருக்கும்.
இதுபோன்ற சூழல்களில் கணக்குப் புத்தங்களை பராமரிப்பது என்பது, வணிகா்கள் தங்கள் வர்த்தக நடைமுறையில் எதிர் கொள்ளும் சவால்களை எளிதில் கடந்து, வெற்றிகரமாக வா்த்தகம் செய்வதற்கு உதவியாக இருக்கும். எனவே, பி 2 சி வா்த்தகத்தில் இ இன்வாய்ஸ் தயாரிப்பு விரைவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளதை, வணிகா்கள் கவனத்தில் கொள் வேண்டும். இவ்வாறு அவா் கூறினார்.