சைதை துரைசாமி அறிவிப்பு
சென்னை, செப்.15- அரசு உதவி குற்றவியல் வக்கீல் நிலை-2 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மனிதநேய அறக்கட்டளை தலைவா் கைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
மனிதநேயம் பயிற்சி மையம்
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயா் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை சோ்ந்த அனைத்து தரப்பினரும், ஐ.ஏ.எஸ்., ஐ.ஆா்.எஸ். உள்ளிட்ட இந்திய அளவில் உயா் பதவிகளுக்கும், குரூப்-1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வு நடத்தக்கூடிய பதவிக்களுக்கும் தோ்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த இலவச பயிற்சியை மனிநேயம் இலவச பயிற்சி மையம் வழங்கி வருகிறது.
இதேபோல் சிவில், மாவட்ட, அரசு உதவி குற்றவியல் வக்கீல் பதவிகளுக்கும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேயம் பயிற்சி மையம் இணைந்து இலவச பயிற்சியை வழங்குகிறது. இதுவரை 286 பேர் சிவில், மாவட்ட, அரசு உதவி குற்றவியல் வக்கீல் பதவிகளில் உள்ளனா்.
இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இதன் தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி. தற்போது அறிவித்துள்ள 51 அரசு உதவி குற்றவியல் வக்கீல் நிலை-2 பதவிக்கான முதல்நிலைத் தோ்வுக்கும் இலவச பயிற்சியை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேயம் பயிற்சி மையத்துடன் இணைந்து வழங்க இருக்கிறது.
இந்த இலவச பயிற்சி வருகிற 21-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் எனவும், அவ்வாறு சேர விருப்பம் இருப்பவா்கள் எண்.28, முதல் பிரதான சாலை சி.ஐ.டி.நகா், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ளது மனிதநேயம் பயிற்சி மையத்துக்கு நேரில் வந்தோ, 044-24358373, 24330952, 25352595 என்ற தொலைபேசி வாயிலாகவோ, 9840439393, 8428431107 என்ற செல்போன் மூலமாகவே, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலோ விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவா் சைதை துரைசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனா்.