பி.எப். உடன் ஆதார் இணைப்பது கட்டாயம்!
கொரோனா பரவல் காரணமாக வருமானம் இன்றி பொது மக்கள் தவிக்கும் நிலையை கலைய பி.எஃப். கணக்கிலிருந்து ஒரு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, ‘பி.எஃப். கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இணைப்பு மேற்கொள்ளவில்லையெனில் ஊழியர்கள் பணி புரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் தொகை இந்த மாதம் முதல் பி.எஃப். கணக்கில் சேராததுடன், கொரோனா கால முன்தொகையும் எடுக்க இயலாது” என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பி.எஃப். கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் www.epfindia.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் இணைக்கலாம் என பி.எஃப். நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.