பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்…
சேமிப்பே, பேரிடர் கால பிரம்மாஸ்திரம்’ என்ற தலைப்பிலமைந்த Catamaran Investment Services-ன் நிறுவனர் பெரியார்செல்வத்தின் நேர்காணல் பங்குச் சந்தை முதலீட்டின் முக்கியத்துவத்தையும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் பங்குச்சந்தை குறித்த அவநம்பிக்கையை போக்கும் வகையிலும் அமைந்தது. ‘முதலீடின்றி லாபம் தரும் பிசினஸ்கள்’ செய்தித் தொகுப்பு அடடே ரகம். ஏராளமான குட்டி குட்டித் தகவல்களால் நிறைந்துள்ளது ‘பிசினஸ் திருச்சி’ அருமை..!
மனோ ரமேஷ், துறையூர்
‘வணிகம் பழகு’ என்னும் கட்டுரைத் தொடர் மிகவும் உபயோகமாக இருந்தது. ‘மாற்று சிந்தனையே மாற்றத்திற்கான தீர்வு!’ எனும் தலைப்பில் அமெரிக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனையினையும் அதற்கு கொடுக்கப்பட்ட தீர்வையும் வாசித்த பொழுது ஆச்சரியமாக இருந்தது.. ஒவ்வொரு பக்கத்திலும் துணுக்குச் செய்திகள் ஏராளம் இருப்பது தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது!
ஆ.ஜெப பிரபாகர், தென்காசி.
வர்த்தகத்தில் ஏ முதல் இசட் வரை அலசுகிறது “பிசினஸ் திருச்சி” இதழ். சர்வதேச வர்த்தகத்தில் துவங்கி திருச்சி வர்த்தகம் வரை பேசுகிறது. பங்கு சந்தைகளையும், மைக்ரோ பைனான்ஸ்களையும் கூறு போட்டு பார்க்கிறது. நுகர்வோர் கோணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை சலித்து விடுகிறது. போற போக்கில் தொலைந்த போன சொத்து பத்திரம் மீட்க கூட ஆலோசனை சொல்கிறது. ஒரு பத்து ரூபாய் இதழ் வர்த்தக சூட்சமங்களை சாமானியர்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்றுத்தரும் பாடநூல் போன்று காட்சி அளிப்பது பிரமிப்பே!
மன்னை மனோகரன்,
ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கம்