வரி முறைகேட்டை தடுக்கும் மின்னணு முறை
மத்திய அரசு வரி மதிப்பீட்டில் அறிமுகம் செய்த மின்னணு முறை என்பது வருமான வரி மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை, நேர்மையான முறையில் வரி கணக்கிடப்படுவதோடு நீண்டகால போக்கில் நன்மை தரும் சீர்திருத்தமே.
வருமானவரி தாக்கல் செய்பவர்களிடம் வருமானத் துறை அதிகாரிகள், தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி வரிவிதிக்கவும் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் முடியாது.
உயரதிகாரிகளின் முறையான அனுமதியை பெற்று தேசிய அல்லது மதிப்பீட்டு மையம் மூலம் தான் அனுப்ப முடியும். வரிமதிப்பீட்டை பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் மூன்று அதிகாரிகள் ஒவ்வொரு நிலையாக சோதனை செய்வதால் ஒரு அதிகாரி தவறு செய்தாலும், மற்றொரு அதிகாரி கண்டுபிடித்து சரி செய்வார். மேலும் இப்புதிய நடைமுறை மூலம் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுவதால் வரிதாரர் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. முறைகேடு தடுக்கப்படும்.