கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், எதிர்காலத்தில் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட இருக்கும் மாற்றத்திற்கு ஏற்ற வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கரியமில வாயுவை குறைவாக வெளியிடும் சிஎன்ஜி, எல்என்ஜி ஆகிய எரிபொருள்களில் இயங்கும் ஏராளமான புதிய வாகனங்களை சந்தையில் விற்பனை செய்ய அசோக் லேலண்ட் நிறுவனம்முடிவு செய்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பேட்டரிகள், எரிபொருளிலிருந்து நேரடியாக மின்னாற்றலை உருவாக்கும் ஃப்யூயல் செல்கள் போன்றவற்றின் மூலம் தான் வாகனங்கள் இயங்கும். அத்தகைய வாகனங்களை வடிவமைப்பதற்கென தனிநிபுணர்கள் கொண்ட குழுவையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது.