Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வருவாய் தரும் ஈ.எம். கரைசல்..!

1

கால்சியம் ஹைப்போகுளோரைட்டின் திரவ, பவுடர் வடிவங்களே பிளீச் மற்றும் பிளீச்சிங் பவுடர். எந்த ஒரு வடிவத்திலும் குளோரினின் பயன்பாடு அதிகரிக்கும்போது சுவாசக் கோளாறுகள் அதிகரிக்கலாம்; உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படலாம்; தோலில் ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படலாம். நீரில் ஒரு லிட்டருக்கு 4 மி.கி. அளவு என்ற விகிதத்தை விட அதிகமாக சேர்க்கப்பட்டால், மனிதருக்கு தீமை விளைவிக்கக் கூடியது. குளோரின் ஒரு புற்று நோய்க் காரணியாகும்.

எனவே, இதன் அதிகமான அல்லது தொடர்ச்சியான பயன்பாடு புற்று நோயை விளைவிக்கக் கூடும். குறைந்த அளவு பயன்படுத்தும்போது, நீர் அருந்தும்போது, அதன் மணத்தை உணர முடியும். சரி… ப்ளீச்சிங் பவுடருக்கு மாற்று உண்டா? உண்டு. உண்டு. பிளீச்சிங் பவுடருக்கு மாற்றாக இ.எம். கரைசலைப் பயன்படுத்தினால், சுற்றுப்புறமும் நீரும் சுத்தமாவது மட்டுமில்லாமல் நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் காப்பாற்றப்படும்.

4

இ.எம். கரைசல் என்பது ஒரு புரோபயோட்டிக்.. ”எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ்(Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M). தமிழில், ‘திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவில் இருக்கக்கூடிய, ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் மூன்று நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் கலவை தான் இ.எம். இந்தக் கரைசலில் இருப்பவை லாக்டோபாசிலி (தயிரில் பெருகுவது), ஈஸ்ட் (பிரெட்டை புளிக்க வைப்பது), போட்டோடிராஃபிக் நுண்ணுயிரி (ஊறுகாய், பாலாடைக் கட்டியில் சில நேரம் சேர்க்கப்படுவது) போன்றவை தான். இந்த இ.எம். கரைசலை நாமே தயாரிப்பது எப்படி..?

3

தேவையான பொருட்கள்:
1) 1 முதல் 1.5 கிலோ வெல்லம்.
2) ஒரு பரங்கிக்காய் (இனிப்பு பூசணிக்காய்).
3) 5 வாழைப்பழம். நன்கு கனிந்தது.
4) 2 பப்பாளிபழங்கள்.

மேற்சொன்ன அனைத்தையும் கூலாக கரைத்து 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளவும். பானையிலோ அல்லது கேனிலோ இவைகளை கரைத்து மண்ணிற்குள் புதைத்து வைத்து விடவும். பிளாஸ்டிக் கேனை உபயோகிக்கும் பொழுது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதனை திறந்து மூடவேண்டும்.

2

அப்பொழுதுதான் நொதித்தல் நடக்கும்பொழுது உண்டாகும் மீத்தேன்வாயுக்கள் வெளியேறும். பானையை துணி கட்டி உபயோகித்தால் இதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கரைசல் 20 நாட்களில் ஈ.எம் 1 ஆகா தயார் ஆகிவிடும். ஒரு வாரத்தில், இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையுடன் காணப்படும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமிநாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு 9 லிட்டர் கிருமிநாசினியும் கிடைக்கும். இதைக்கொண்டு வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும். தயார் செய்த கரைசலை மாதங்கள் வரை சேமித்து வைத்து கொள்ளலாம். தயாரித்த இரண்டு மாதத்திற்குள் உபயோகப்படுத்தும்பொழுது இதன் வீரியம் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இதன் வீரியம் குறைய தொடங்கும்.

ஒரு லிட்டர் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலை, 25 லிட்டர் மேம்படுத்தப்பட்ட கரைசலாகவும், பிறகு அந்த மேம்படுத்தப்பட்ட கரைசலில் ஒரு லிட்டரை 50 லிட்டர் நீர்த்த கரைசலாகவும் மாற்ற முடியும். இந்த நீர்த்த கரைசலையே பிளீச்சிங்குக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, ஒரு லிட்டர் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலைக் கொண்டு 1,250 லிட்டர் நீர்த்த கரைசலைப் பெற முடியும்.

குளோரினுக்கு மாற்றாகச் செயல்திறன்மிக்க நுண்ணுயிர் கரைசலைக்கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, தொற்றுநோய் பரவல் தடுக்கப்பட்டது. ஈ, கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, நீர், நிலம், மற்ற இயற்கை உயிர் சுழற்சிகள் ஊட்டம் பெற இ.எம். கரைசல் பெரிதும் உதவும். சுற்றுப்புறச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் இந்தக் கரைசல் உதவுவதைப் பயன்படுத்திய பிறகு உணர முடியும்.

இந்தக் கரைசல் துர்நாற்றத்தைப் போக்குவதுடன், தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழித்து, நன்மை செய்யும் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கவும் செய்கிறது. இவற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தால் கணிசமான வருமானமும் கிடைக்கும்.

5

Leave A Reply

Your email address will not be published.