திருச்சியில் இன்டீரியர் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் பாலிமார்பிள் ஷீட்.!
கட்டுமானத் துறையில் புதிய புதிய வரவுகள் சந்தையை ஆக்ரமித்து வருகின்றன.
புதிதாக வீடு கட்டுபவர்கள், குறிப்பாக பட்ஜெட் பார்த்து வீடு கட்டுபவர்களுக்கு பெரிதும் மலைப்பை ஏற்படுத்தும் விஷயம் கிரானைட், மார்பிள், டைல்ஸ். காரணம் அதன் விலை. வீடு அழகாக, நிறைவை தருவது டைல்ஸ் பதித்த பின்பு தான். அதேபோல் வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக புதிதாக தொடங்கும் தொழில் கூடங்கள், சுவற்றில் பூசும் வர்ணங்களுக்கு கணிசமான தொகையை செலவு செய்த பின்பே வடிவம் பெறும். அத்துடன் இரண்டு அல்லது மூன்றாண்டுக்கு ஒருமுறை மீண்டும் வர்ணம் பூசுவதற்கு செலவு பிடிக்கும்.
இது போன்றவர்கள், எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளில் சிக்காமல், அதேவேளையில் மிகவும் உயர்தர தோற்றத்தை(Hi-Look) வழங்கக் கூடிய ஒரு புதிய வரவு தான் இந்த பாலிமார்பிள்ஷீட். ”இத்தாலியன் மார்பிள், கிரானைட், டைல்ஸ்-க்கு மாற்றாக களமிறங்கியுள்ளது தான் இந்த பாலிமார்பிள்” என்கிறார் திருச்சியின் விநியோகஸ்தரான எவர்ஷைன் பாலிமார்பிள் நிறுவனத்தின் பங்குதாரர் ஜெயபிரகாஷ்.
”வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மார்பிள், டைல்ஸ் மற்றும் பிளைவுட் மூலம் இன்டீரியர் செய்யும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவு செய்தாலே போதும், அதே போன்றதொரு உயர்தர தோற்றத்தை வழங்கும் இந்த பாலிமார்பிள். மார்பிள், டைல்ஸ் பதிப்பதைவிட இதை பதிப்பது எளிது. எடை குறைவு என்பதால் கையாள்வது எளிது. இணைப்பு தெரியாது. சாதாரணமாக 10×10 இடத்தில் மார்பிள் பதிக்க நான்கு நாட்களாகும். ஆனால் பாலிமார்பிள் பதிக்க இரண்டு நாட்கள் போதுமானது. இதனால் வேலை நாட்கள், வேலையாட்கள் கூலி குறைகிறது.
கால்ஸியம் கார்பனேட் மூலப்பொருளினால் தயாரிக்கப்படும் இந்த பாலிமார்பிளை கரையான், பூச்சி அரிக்காது. சுற்றுப்புறச்சூழலிற்கு தீங்கு விளைவிக்காது. தண்ணீரில் ஊறினாலும், தீபட்டாலும் சேதமடையாது. கறைபடியாது. கோடு விழாது. நீர்கசிவு ஏற்படாது. கறைபடியும் பொருட்கள் இதில் பட்டாலும் அவற்றை சோப் ஆயில் கொண்டு எளிதாக சுத்தம் செய்யலாம். 8ஜ்4 அடியில் பதிக்கப்பட்ட ஷீட்டில் ஏதாவது ஒரு பகுதியில் டேமேஜ் (PHYSICAL DAMAGE) ஆனாலும் அந்த சிறிய இடத்தை மட்டும் மாற்றிடலாம். இணைப்பு தெரியாது. 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.
அத்துடன் பாலிமார்பிள் பதிக்கப்பட்ட அறையின் வெப்பநிலை ஒரே சீராக, குளுமையாக இருக்கும். வெளிப்புற வெப்பத்தை கடத்தாது. குளிர்சாதன அறை என்றால் ஏ.சி.க்கான மின்கட்டணம் குறையும். இரைச்சலை கட்டுப்படுத்தும்.
வீடுகள், அலுவல கங்கள் மட்டுமின்றி திருமண கூடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பள்ளிக் கூடங்களிலும் பதித்து மெருகேற்றலாம். மேலும் அலுவலக பர்னிச்சர், அலமாரிகள், டேபிள் மற்றும் வீடுகளில் கேபினெட், ஷோகேஸ், டிவிகேபினட், சமையலறையினையும் பொலிவுற செய்யலாம். 40 விதமான வண்ணங்களில், டிசைன்களில் கிடைக்கிறது” என்றார்.
இல்லங்களை புத்தம் புதிய வரவான பாலிமார்பிள் ஷீட்டை பயன்படுத்தி கண்களைக் கவரும் மார்பிள் மாளிகையாக்கலாம். திருச்சியில் இந்த பாலிமார்பிள் ஷீட் விற்பனை செய்ய டீலர்கள் வரவேற்கப்படுகின்றனர். நுகர்வோர் மற்றும் டீலர்க்கான விசாரணைக்கு 95008-10321, 97901-85221, 97504-84402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.