வாசகர்களின் ஷொட்டுகள்…
- தொடர்ந்து ‘பிஸ்னஸ் திருச்சி’ படித்து வருகிறேன், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் முன்னிலைபடுத்தி செய்திகள் வெளிவருகிறது. அதிலும் அதைப் பற்றிய முழுத் தெளிவும் அடங்கியிருக்கிறது. இதே பாணியில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ரமேஷ், உறையூர்
- ‘எது புத்திசாலித்தனம்’ என்ற தலைப்பில் நீங்கள் வெளியிட்ட செய்தியை படித்தேன். மிகவும் சிறந்த கட்டுரையாக இருந்தது, நான் இரண்டு மூன்று முறைக்கு மேல் வாசித்தேன்.
டேனியல், சமயபுரம்
- பிசினஸ் திருச்சி நவம்பர் 16 இதழ் பக்கத்திற்கு பக்கம் சுவை ஊட்டுவதாக இருந்தது. ‘உணவு சந்தையை ஆக்கிரமிக்கும் பிரியாணி’ கட்டுரை அருமை. செய்யும் தொழிலே தெய்வம் என்று செய்யக்கூடிய தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் விதமாக வரலாற்றுக் கருத்துகளையும் எடுத்து உரைப்பது சிறப்பு. மலைகோட்டை மாநகரில் பிசினஸ் திருச்சி ஒரு மைல்கல்லாக உள்ளது வாழ்த்துக்களுடன்
பீர் முகமது, பாலக்கரை
- கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர், அரிசி ஆலை அதிபர் என்று கூறுவோர் உண்டு. ‘கே.என்.நேரு-அரசியல் தெரிந்த முழுமையான விவசாயி’ கட்டுரையின் மூலம் அவர் ஒரு விவசாயி என்று உரக்கச் சொன்னது ‘பிசினஸ் திருச்சி’ மட்டுமே.!
கனி, லால்குடி