வேலையே பிடிக்கவில்லை என்பவரா நீங்கள்?
- யோசிக்காமல் கால் வைப்பது : “நிர்வாகம் சார்ந்த வேலை வேண்டும் அல்லது வேகமாக வளரும் நிறுவனத்தில் வேலை தேவை’’ என்பது போன்ற தெளிவில்லாத இலக்கை கொண்டிருக்கும் பலர் தவறான வேலையில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படி தெளிவான இலக்கு இல்லாமல் இருப்பவர்களின் தேடல் வலுவில்லாமல் இருப்பதோடு குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்துவதும் இல்லை.
- உங்கள் பயோடேட்டாவில், உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் என்ன? உங்களைப் பற்றி நன்றாக யோசித்து, பலமாக இருக்கும் அம்சங்களை கண்டறியுங்கள். நீங்கள் செய்ய விரும்பும் வேலை பற்றி, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வேலை குறித்து கற்பனை செய்து பாருங்கள். இந்த வரையரைக்குள் வரும் நிறுவனங்களை கண்டறிந்து விண்ணப்பிக்கவும்.
- வேலை தேடும் நிறுவனம் பற்றி கூகுள் செய்யுங்கள். வர்த்தக வலைப்பதிவுகள், தளங்கள் தகவல் சுரங்கமாக விளங்குபவை. நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள லின்க்டுஇன் தளமும் நல்ல இடம்.
- சரியான நபரை அடைய தொடர்புகளை பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் இருப்பவர் யாரையும் தெரியவில்லை என்றால் நெட்வொர்கிங் நிகழ்வுகளுக்கு சென்று கை குலுக்குங்கள்.
- நீங்கள் நுழைய விரும்பும் துறையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.