அமெரிக்காவில் நவீன தொழில் நுட்பம் கொண்ட மிகப் பெரிய துறைமுகத்தின் அருகிலேயே மற்றொரு சிறிய துறைமுகம் இருந்தது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்த இரு துறைமுகங்கள் வழியாகத் தான் கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு போக வேண்டும். சிறிய துறைமுகம் எப்பொழுதும் பிசியாக இருக்கையில், பெரிய துறைமுகத்திற்கு ஒன்றிரண்டு கப்பல்கள் மட்டுமே கார்களை ஏற்றிச் செல்ல வந்தன. சிறிய துறைமுகம் பிசியாக இருக்கும் சூட்சமங்களை அறிய பெரிய தொகை கொடுத்து ஒரு புலனாய்வு அமைப்பை அமர்த்தியது பெரிய துறைமுகம். அவர்கள் ஒரே வாரத்தில் இன்வஸ்டிகேஷன் செய்து ரிப்போர்ட் கொடுத்தார்கள்.
அதாவது அந்த சிறிய துறைமுகத்தில் கார்களை அதிகமாக நிறுத்தும் வகையில் ஒவ்வொரு காரின் இடைவெளியில் நிற்கும் டிரைவர்களை நம்ம சிம்ரன், த்ரிஷா போல ஒல்லி குச்சியான நபர்களை போட்டிருந்தார்கள்.
அதனால் அதிக கார்களை அந்த யார்டில் பார்க் செய்ய முடிந்திருக்கிறது. ஒரு ட்ரிப்பிற்கு 100 கார்கள் தான் என்கிற இடத்தில் இப்படி ஒல்லியான டிரைவர்களை போடும் போது 50 கார்களை எக்ஸ்ட்ராவாக நிறுத்த முடியும். இது தான் புலனாய்வு அமைப்பு கொடுத்த ரகசியம்.
இதை கேட்டதும் பெரிய துறைமுகத்தின் நிர்வாகம் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது. நம்ம குண்டு கல்யாணம் சைசில் இருந்த அமெரிக்க டிரைவர்களை அலேக்காக தூக்கிவிட்டு சிலிம்மான சைனிஸ் பெண் டிரைவர்களை ஒவ்வொரு காரின் இடைவெளியில் நிறுத்த இப்போது அந்த யார்டில் கூடுதலாக நூறு கார்கள் நிறுத்த வசதி கிடைத்தது. இந்த விஷயம் எல்லா நாடுகளுக்கும் பரவ அதிலிருந்து அந்த துறைமுகம் பிசியாகி வர்த்தகத்தில் களை கட்டியது.
இப்படி ஒவ்வொரு வியாபாரத்தின் தோல்விக்கு பின்னாலும் நுட்பமான சில காரணங்கள் இருக்கும். அதை கண்டுபிடித்து சரி செய்பவர்கள் வணிகத்தில் ஜெயித்து கொடி கட்டி பறக்கலாம்.
திண்டுக்கல் ‘நாகா புட்ஸ்’ நிறுவனர் கமலக்கண்ணன், விநியோகஸ்தர் களுடன் நடத்திய கலந்துரையாடல் சந்திப்பில் பேசியது.