15 ஆண்டுகளில் ஒரு கோடி தரும் பிபிஎஃப் திட்டம்..!
பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (பிபிஎஃப்) என்று கூறப்படும் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமின்றி, ஓய்வு காலத்தில் மிகவும் பயனளிக்கும் திட்டமாகவும் உள்ளது.
நீண்ட கால அடிப்படையில் மாதாமாதம் ஒரு தொகையை இடைவிடாமல் செலுத்தி வர ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு மிகப் பெரிய லாபம் ஈட்ட சிறந்த சேமிப்பாக உள்ளது பிபிஎஃப்.
இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போதைக்கு இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்திற்கு வரி சலுகையும் உண்டு. இத்திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருடம் தொடரலாம் என்பது சிறப்பம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் மாதம் ரூ.9,000 செலுத்தினால் 15வது வருட நிறைவில் ஒரு கோடி ரூபாய் பெறலாம்.