தனியார் மயமாக்கப்பட்ட வங்கிகள்..!
இன்று, தனியார் துறையில் உள்ள மூன்று பெரிய வங்கிகள், அதாவது ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் AXIS வங்கி இவை மூன்றுமே அரசாங்க வங்கிகளாக இருந்தன. இவை அனைத்தும் இந்திய அரசாங்கத்தின் அமைப்பாகும்.
ஐ.சி.ஐ.சிஐயின் முழுப்பெயர் “இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டுக் கூட்டு ஸ்தாபனம்‘’. பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கென செயல்படுகிறது. எச்.டி.எஃப்.சி வங்கியின், முழுப்பெயர் “இந்திய வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்’’. இது நடுத்தர மக்களுக்கு வீட்டுக் கடன்களை மலிவான வட்டிக்கு வழங்கி வந்தது.
இப்போது ஆக்சிஸ் வங்கி என்ற பெயரில் செயல்படும் வங்கி தொடக்கத்தில் “யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் சிறிய சேமிப்புகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. “இந்திய தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்‘’ என்றழைக் கப்படும் இந்திய அரசாங்க அமைப்பாக இருந்த வங்கி தான் இப்போது ஐடிபிஐ என்ற பெயரில் செயல்படும் தனியார் வங்கியாகும்.
மேற்கூறிய அனைத்தும் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதிஅமைச்சராக மன்மோகன்சிங் இருந்த காலத்தில் தனியாருக்கு விற்கப்பட்டன.