Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெரும் வணிகர்களை குறிவைத்து  அதிரடி ஜிஎஸ்டி வரி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பெரும் வணிகர்களை குறிவைத்து  அதிரடி ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி முறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் வணிகர்கள் இ-இன்வாய்ஸ் தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நடைமுறை 2020 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இப்போது, இந்த இ-இன்வாய்ஸ் வட்டம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் வணிகர்களையும் தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நடைமுறை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் வணிகர்கள், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இ-இன்வாய்ஸ் தயாரிக்க வேண்டியது கட்டாயம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இதற்காக, இ-இன்வாய்ஸ் பக்கத்தைப் பராமரிக்கும், தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர் குழுவுக்கு, ஜிஎஸ்டி அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பான நடவடிக்கையை இ-இன்வாய்ஸ் இணையப் பக்கத்தை பராமரிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.