உங்கள் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு…
இப்போது இருக்கும் உங்கள் வீடு, தங்கம், முதலீடுகள் மட்டுமே உங்களின் சொத்து அல்ல. எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போவதும் உங்கள் சொத்துதான். வீட்டிலிருக்கும் பொருள்களின் இழப்பை ஈடுகட்ட காப்பீடு எடுத்திருப்பது போல், உங்கள் எதிர்கால வருமானத்தைப் பாதுகாக்க காப்பீடு எடுப்பது அவசியம்.
உதாரணத்துக்கு, 35 வயதாகும் குடும்பத் தலைவருக்கு மனைவி, இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத் தலைவர் திடீரென அசம்பாவிதங்களைச் சந்தித்தால், அவரின் மனைவி, பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்? எனவே, குடும்பத் தலைவரின் வருமானத்தைப் பாதுகாக்க அவரின் பெயரில் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம்.
ஒருவரின் மாதச் சம்பளம் ரூ. 30,000 எனில், அவரின் ஆண்டு சம்பளம் ரூ.3.60 லட்சம். இதைப் போல் சுமார் 15 மடங்கு தொகை, அதாவது ரூ. 45 லட்சத்துக்குக் குறையாமல் டேர்ம் பிளான் எடுப்பது அவசியம். இதற்கான பிரீமியம் ஆண்டுக்கு சுமார் 12,000 இருக்கும். இந்தக் காப்பீடு என்பது குடும்பத்தின் சொத்து இழப்பைக் காப்பாற்றும் கவசமாக இருக்கிறது.