திருச்சியில் குறைந்த செலவில் அழகிய வடிவில் தரமான அடையாள அட்டைகள்..!
இந்தியாவில், ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்தால் அவர் தனது கழுத்தில், அவரைப் பற்றிய விபரங்கள் கொண்ட அடையாள அட்டையை மாட்டிக் கொண்டு தான் வெளியே வர வேண்டும் என வரும் காலத்தில் சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறும் அளவிற்கு அடையாள அட்டையின் தேவை அதிகரித்து வருகிறது.
இன்றைய காலத்தில் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்வது முதல் நமது கழுத்தில் அடையாள அட்டை தொங்கத் தொடங்கிவிடும். பள்ளி, கல்லூரியை அடுத்து வேலைக்கு சென்றால் வேலை செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டையை மாட்டிக் கொண்டு தான் பணியாற்ற வேண்டும். சாதாரண இந்திய பிரஜைக்கு அடையாள அட்டையாக ஆதார் நிலவுகிறது. Proximity ID card, Magnetic stripe ID card, School ID card, Visitor access ID card, Over laminated ID card என அடையாள அட்டைகள் பல்வேறு வகைகளில் உள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் கொண்ட அடையாள அட்டையினை வடிவமைத்து தரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ளது “குரு டிஜிட்டல்”. இதன் உரிமையாளர் எல்.பொன்குமார் கூறுகையில்,
“அடையாள அட்டைகள் பல்வேறு ரகங்களில், தரத்தில் வடிவமைத்துத் தருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டை, வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, முக்கிய நிகழ்ச்சிகளில் அனுமதி அளிக்க உருவாக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை என பல்வேறு இடங்களில் அடையாள அட்டைகளின் தேவை உள்ளது.
ஒவ்வொன்றிலும் விலைக்கு ஏற்ப பலவித தரத்துடன் தயாரித்து வழங்குகிறோம்.
கழுத்தில் மாட்டும் பட்டையில் (TAG) நிறுவனத்தின் பெயர் அச்சடித்து வழங்குகிறோம். குறைந்தது 15 கார்டு ஆர்டர் கொடுக்கும் நிறுவனங்களின் பெயர் பட்டையில் அச்சடித்து வழங்கப்படும். இந்த பட்டையில் (TAG) பலவித வண்ணங்களில், தரத்தில் வடிவமைத்து தருகிறோம்.
திருச்சியில் சுமார் 20 பள்ளிகளுக்கு மேல் மாணவர்களுக்கான அடையாள அட்டையை நாங்கள் தயாரித்துத் தந்து கொண்டிருக்கிறோம். மேலும் நிறுவனங்களுக்குத் தேவையான பிசினஸ் கார்டு, பார் கோடுகளுடன் இணைத்துத் தருகிறோம். அத்துடன் ஹோலோகிராம் தேவைப்படுவோர்க்கும் அவற்றை இணைத்து தயாரித்துத் தருகிறோம்” என்றார். தேவைப்படுவோர் 0431-4010271, 93454- 06455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.