புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி- -& பதில் பகுதி
பிணையம் (சொத்து ஜாமீன்) இல்லா கடன்வசதி பெற வாய்ப்புகள் உண்டா ?
பிணையம் இல்லா கடன் வசதி சுமார் 2 கோடி வரை பெற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு முயற்சிக்கலாம்.
அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் தொழில் முனைவு கடனுதவி கிடைக்குமா அல்லது வேறு மாவட்ட தொழில் முனைவோருக்கும் வாய்ப்புகள் கிடைக்குமா ?
அனைவருக்கும் வாய்ப்புகள் பொதுவானவைதான். நடைமுறைகள் மட்டும் மாவட்ட நிர்வாக அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குட் பட்டவை
ஒற்றைச் சாளர முறை என்றால் என்ன ?
ஒரு புதிய தொழிலை துவங்கு வதற்கு முன் பெறப்பட வேண்டிய நிர்வாக ஒப்புதல்கள், முன் அனுமதிகள், மின் இணைப்புகள், வரித்துறை பதிவுகள் போன்றவற்றிக்காக அந்தந்த அலுவலகத்தை அணுகாமல் அனைத்தையும் மாவட்ட தொழில்மையம் மூலமாக விண்ணபித்து அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒற்றைச் சாளர முறை என்று பெயர்.
GST என்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் தெளிவில்லாத குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கிறது இதற்கு நிவாரணம் என்ன?
திருச்சி சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் GST அலுவலத்தில் இதற்கென சேவை மையம் இயங்கி வருகிறது. அங்கு அனைத்து குழப்பங்களும் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்படுகின்றன. அங்கே அணுகலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு -தொடர்பு கொள்ளவும்
தொழில் ஆலோசகர் இரா.சண்முகம் 9791 949 333