அய்யாவுக்கு நாலு சிக்கன் ரைஸ் பார்சல்…. ருசி கண்ட பூனைகளுக்கு… அலர்ட்…
பாஸ்ட்புட் கடை வைத்திருந்த ஒருவர் விரைவாக உணவு தயாரித்த விதத்தையும், பெரும்பாலானகடை முதலாளிகள் இந்த முறையை கடைபிடித்து நன்றாக சம்பாதிப்பதாகவும், ஆனால் ஏனோ மக்கள் உடல்நிலைதான் பாதிக்கப்படுவதை அறியாமல் உண்பதாக கவலையுடன் தெரிவித்தார். அவர் உணவு தயாரிக்கும் விதங்களை பார்ப்போமா….
பழைய சிக்கன்…னு.. தெரியாம இருக்க..
பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கெட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை.
தடை செய்யப்பட்ட பொருள…
சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வயிற்றுக்குள் போனால் ???
கலப்பட சாட்ஸ்…
சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை.மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின எண்ணையோ கலந்து செய்றோம்.
பாமாயிலை கொட்டுறோம்..
எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை, பாமாயில் தான் யூஸ் பண்றோம். ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் போது சாதம் கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் .
ஒரு வாரத்துக்கு கழுவ மாட்டோம்…
அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள எண்ணை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் .
உடல் கேடுக்கு அஜினமோட்டா…
அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும். மேலும் எதிர்காலத்தில் கிட்னி பெயிலியர் ஏற்படும். இது அதிகமாக வெஜ்டேரியன் மற்றும் அசைவ உணவகங்களில் சேர்க்கிறார்கள். சோதித்து பாருங்கள் ..
பெப்பரா… கோல மாவா…?
வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..
காலாவதியான சாஸ்…
தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த, காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் .. இதும் கிட்னி பாதிப்பை ஏற்படுத்தும்.
மோந்து பார்க்காதீங்க…
சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும் .. இதும் கிட்னி பாதிப்பை ஏற்படுத்தும்.
எல்லா கெமிக்கலையும் கலக்கறாங்க…
மிக அதிகமான கெமிக்கல்கள் பாஸ்ட் புட் கடையில்தான் சேர்க்கப்படுகிறது. சில உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது தான் .. நாங்கள் பாஸ்ட் புட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள். ஏதோ எங்களால முடிஞ்ச வரைக்கும் நிறைய பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பில்ல கட்ட வைக்கிறோம்.
சிட்டியில சில கடைகள் மட்டும் தான் தரமான செஞ்சு தர்றாங்க. அதனால் மக்கள் முடிஞ்சவரைக்கும் நல்ல டிபனை வீட்லயே செஞ்சு சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்க சொல்றார் நம்ம பாஸ்ட்புட் ஓனர்…