Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொழில் முறை ஆலோசகர்களின் வழிகாட்டல் யாருக்கெல்லாம் தேவை?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தொழில் முறை ஆலோசகர்களின் வழிகாட்டல் யாருக்கெல்லாம் தேவை?

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

முதலீட்டு விஷயங்களில் உணர்ச்சிபூர்வமாகச் செயல்படாமல், அறிவுபூர்வமாகச் செயல்பட ஓர் உறுதியான துணை தேவை. இதுபோன்ற பல காரணங்களால் தொழில் முறை ஆலோசகர்களின் வழிகாட்டலை நாடுகிறோம்.

  •  பல வருடங்களாக கைநிறைய சம்பாதித்திருப்போம். கொரோனாகூட நம் வருமானத்தை அசைத்துப் பார்த்திருக்காது. ஆனால், நம் கையிருப்பு என்ன, முதலீடுகள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவு இருக்காது. காரணம், சரியான நிதி நிர்வாகம் இல்லாமல், சேமிக்கத் தவறியிருப்போம்.
  •  இன்னும் சிலருக்கு ‘வாழ்வில் இதுதான் சேமிக்கும் வேளை; இப்படியான வழிகளில் சேமிக்கலாம்’ என்று நன்றாகவே தெரியும். ஆனால், செயலாக்கம் என்று வரும்போது, ஆயிரம் யோசனைகளால் சேமிப்பும், முதலீடும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு வருட, இரு வருடக் கதையானால் பரவாயில்லை. முடிவே இல்லாமல் தொடருமானால் சம்பாதித்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
  • சிலருக்கு பொருளாதார நிர்வாகத்தில் சுத்தமாக ஆர்வம் இருப்பதில்லை. அதில் தவறொன்றும் இல்லை. எல்லாவற்றையும் நாமே செய்வது என்பது கடினம்; அநாவசியமும்கூட. ஆனால், இவர்கள் பொருளாதார நிர்வாகத்தை மொத்தமாகப் புறக்கணிப்பதுதான் தவறு.
  • DIY (Do It Yourself) ) எனப்படும் தானே செய்துபார்க்கும் ஆர்வம் இன்றைய இளம்தலைமுறைக்கு அதிகம். ஆனால், அதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள நேரம் இல்லாமையால் அவ்வப்போது நஷ்டங்களைச் சந்திக்க நேரும். இதில் மனமுடைந்து சிலர் அடுத்தடுத்து முதலீடு செய்வதையே தவிர்ப்பதும் உண்டு.
  • சிலர், வரிச்சேமிப்பு தரும் முதலீடுகளில் மட்டுமே அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். இன்ஷூரன்ஸ் போன்ற சில வரிச்சேமிப்பு முதலீடுகள் நல்ல வருமானம் தருவதில்லை என்பது தெரிந்தாலும், புதிய வழிகள் தெரியாமல் அதையே தொடர்வார்கள்.
  • நம் அனைவருக்குமே செலவுகள் சிறிதும், பெரிதுமாக வரிசை கட்டிக் காத்திருக்கும்; பணி ஓய்வை சந்திக்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற குழப்பம் இருக்கும். கையில் பணம் இருந்தாலும் எந்த இலக்குகளுக்கு எவ்வளவு, எங்கே சேமிக்க வேண்டும்; எத்தனை காலம் பொறுத்தால் நல்ல வருமானம் கிட்டும் என்பது போன்ற விஷயங்களில் தெளிவு இருக்காது.
  • வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் பொருளாதார விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். யார் கூறுவது சரி, எந்த வழியைப் பின்பற்றலாம் என்பதில் மனஒற்றுமை வராமல் எந்த வழியையுமே பின்பற்ற முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதுபோன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் ஆலோசகர்களின் உதவி கைகொடுக்கும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.