நச்னு 4 விஷயம் படிங்க…
பங்குசந்தையில் நிரந்தர வருமானம் பெற…
பங்குசந்தை முதலீட்டில் அதிக ஏற்ற இறக்கங்களை விரும்பாதவர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் பண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். இதில் குறைந்தது 10% வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கனரா ராபிகோ ஸ்மால்கேப் ஃபண்ட், யூனியன் மிட் கேப் ஃபண்ட், பிஜிம் இந்தியா மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட், குவான்ட் ஆக்டிவ் ஃபண்ட், மஹிந்திரா மேனுலைஃப் மல்ட்டிகேப் ஃபண்ட், பராக் பரிக் ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் ஈக்விட்டி & டெப்ட் ஃபண்ட் ஆகியவற்றில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம்.”
இலக்கை தொட்டாச்சாம்… அரசு ஹேப்பி தான்…
மாநில சொந்த வரி வருமானத்தில் பெரும்பங்கை தருவது பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை ஆகும். பத்திர பதிவுத்துறையில் கம்ப்யூட்டரைஸ்ட் செய்ததால் பதிவு எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் கணிணி தொழில்நுட்பத்தால் வில்லங்க சான்று, பத்திர நகல் பெறுவது எளியமையானது. மேலும் பத்திரம் பதிவதில் கூடுதல் கட்டணம் செலுத்தும் தத்கல் முறை அமலானதால் வருவாய் மேலும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்தாண்டு ரு.13,913 கோடி ரூபாய் வரிவருவாயாக கிடைத்துள்ளது. இது பத்திரபதிவு வரலாற்றில் இல்லாத அளவாகும்.
வியாபாரிகளுக்கு அரசின் சிறந்த வாய்ப்பு
தமிழகத்தின் ஓவ்வொரு ஊரிலும் தயாரிக்கப்படும் சிறப்பு பொருட்களை பிற ஊர்களுக்கு லாரி மற்றும் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் மூலமும் இம்முறையில் வெளியூர்களுக்கு பொருட்களை அனுப்ப அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அரசு பஸ்சின் சுமை பெட்டியில் வாரமுறையிலோ அல்லது தினந்தோறுமோ பொருட்களை அனுப்பலாம். இந்த வசதியை பெற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த வசதி ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இளம் வயதிலேயே ஓய்வுகால முதலீடு
நிதி இலக்குகளை ஒரு நோட்டில் குறித்து வைப்பது அதைச் செயல் படுத்துவதற்கான முதல் படியாகும். மருத்துவ வசதி மேம்பட்டிருப்பதால், நாம் நீண்ட காலம் வாழப் போகிறோம். பெரும்பாலானவர்களின் உடல் நிலை 60 வயதுக்கு மேல் வேலை செய்து சம்பாதிக்கும் நிலையில் இல்லை.
நமது பணிக்காலம் முடிந்து, அதன் பிறகு 15 முதல் 20 ஆண்டுகள் வரை எந்த வருமானமும் இல்லாமல், செலவுகளைச் சமாளித்து வாழ வேண்டும் எனில், பணவீக்கத்தை அதாவது, விலைவாசி உயர்வை சமாளித்து வாழ வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும். இதைச் சமாளிக்க இளம் வயதிலேயே ஓய்வுக்காலத்துக்குத் திட்டமிடுவது அவசியமாகும்.