ஓய்வுநேரத்தில் கைநிறைய வருமானம் பார்க்கலாம்
பெண்கள் வீட்டிலிருந்தே எளிமையாக செய்யக் கூடிய தொழில்களை பற்றி பார்ப்போம். அந்த காலத்தில் தான் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்று வீட்டிலே முடக்கி போட்ட காலம். ஆனால் இப்போது மாறிவிட்டது. ஏனென்றால் இருவரும் சம்பாதித்தால் தான் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற முடியும். சில பெண்களால் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத நிலை இருக்கும். அவர்கள் எல்லாரும் மற்ற பெண்களை பார்த்து பொறாமைப்படுவார்கள். நாமும் வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில்கள் எதாவது இருந்தால் செய்யலாம் என்று நினைப்பீர்கள். அவர்களுக்கான விஷயம் இது.
பொதுவாக காய்கறி நறுக்குவது என்றால் கஷ்டமாக இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களே காய்கறிகளை நறுக்கி சமைப்பது எளிதானது அல்ல. அவர்கள் சமைக்கும் போதே யாராவது உதவி செய்தால் ஈஸியா இருக்கும் என்று நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஹோட்டல் வைத்திருப்பவர்களும் காய்கறிகளை நறுக்கி சரியான நேரத்திற்கு சமைக்க கஷ்டப்படுவார்கள். உங்களுக்கு காய்கறிகளை நறுக்க தெரிந்தால் போதும் இந்த தொழிலை செய்யலாம். இதை எப்படி விற்பது என்று கேட்கிறீர்களா.? காய்கறிகளை தனியாக நறுக்கி பாக்ஸ் அல்லது கவரில் பேக் செய்யவும். இதை வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஹோட்டல் வைத்திருப்பவர்களிடம் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் அளவை பொறுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம். காய்கறி மட்டுமில்லாமல் கீரை மற்றும் தேங்காய் துருவல் செய்து கொடுக்கலாம். இதற்கென்று தனியாக பணம் பெற்றுக்கொள்ளலாம். இந்த பிசினஸ் செய்தால் நல்ல வருமானம் தரும். நீங்கள் நல்லா டேஸ்ட்டா சமைப்பீர்கள் என்றால் இந்த Food Business தொழிலை செய்யலாம். எப்படி.? அதற்குத்தான் ஹோட்டல் இருக்கே என்று நினைக்கிறீங்களா.! ஹோட்டல் சாப்பாடு எல்லாரும் உண்ணமாட்டர்கள். ஏனென்றால் சிலர் உடம்புக்கு ஏற்றுக் கொள்ளாது.
வெளியூரிலுருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் நம் அம்மா மாதிரி ஒருவர் சமைத்து கொடுத்தால் நன்றாக சாப்பிடலாம் என்று நினைப்பார்கள். நம்மால்
50 பேர் 100 பேருக்கு சமைக்க முடியாது. ஆனால் 3 அல்லது 5 நபர்கள் வரை சமைக்கலாம். அவர்களுக்காக தனியாக சமைக்க போவதில்லை.
நீங்கள் வீட்டிற்கு சமைப்பதிலே கொஞ்சம் சேர்த்து சமைத்தாலே போதுமானது. அவர்களிடம் நீங்கள் தெளிவாக பேசிவிட வேண்டும். என்னவென்றால் நீங்கள் வந்து உணவை வாங்கிக் கொள்வீர்களா இல்லை நாங்கள் உணவை உங்கள் இடத்திற்கு வந்து தரணுமா என்று கேட்டு கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு எவ்வளவு என்று பார்த்து அவர்களிடம் மாத தொகையாக Rs.15000 முதல்25000 வரை சம்பாதிக்கலாம். இந்த தொழில் நஷ்டமே ஆகாது. லாபத்தை மட்டும் தரும்.
பெண்கள் உடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடை கடையாய் உடைகள் வாங்குவதற்கு அலைவார்கள். அவர்களுக்காக நீங்கள் வீட்டிலே சேலை, சுடிதார் மற்றும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு தேவை யான ஆடைகள் விற்கலாம். நீங்கள் ஆடைகள் வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். தரமாகவும், விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அது போலத் தான் நீங்கள் விற்கும் ஆடைகளும் இருந்தால் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.