பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்…
அரசு அலுவலகங்கள் என்றாலே ஊழல் மலிந்திருக்கும் இடமாக இருக்க, கல்லக்குடி பேரூராட்சியோ தமிழகத்திற்கே முன்னுதாரணமாக வருவாய் ஈட்டித் தரும் பேரூராட்சியாக உயர்ந்து நிற்பது பெருமைக்குறியது.
-என்.நிசார், திருச்சி
ஆன்லைன் மூலம் வாடகை செலுத்தலாம், ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் கட்ட தேதி நீட்டிப்பு, வரி கணக்குகள் தாக்கல் காலக் கெடு நீட்டிப்பு என பல்வேறு நினைவூட்டல்கள் பயனுள்ளதாக உள்ளது.
-கே.கண்ணன், உறையூர்
என்னது ஐந்து ரூபாய்க்கு புரோட்டாவா என ஆச்சரியப்பட வைத்தது மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள மலிவு விலை உணவகம்..! தொடரட்டும் அதன் சேவை..!
-பி.சங்கர், திருவரம்பூர்
கேரள பாரம்பரிய அசைவ உணவுகள் கட்டுரை படித்தேன். ஹோட்டல் சென்று சுவைத்தேன். அருமை..!
-எம்.கனிமுத்து, பொன்மலை
வங்கிக் கடனில் வீடு வாங்கப் போகிறீர்களா.. கட்டுரை பயனுள்ளதாக இருந்தது.
எஃப்.கவிதா, வயர்லஸ் சாலை, கேகேநகர்
வணிகம் பழகு தொடர் படிக்க படிக்க உற்சாக டானிக்காக உள்ளது. புதிய தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் தொடராக வருகிறது. வாழ்த்துக்கள்.
-ரா.கந்தன், குளித்தலை