பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்:
- ‘பிசினஸ் திருச்சி’ இதழில் வெளியாகியிருந்த, “குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் காளான் வளர்ப்பு” கட்டுரையை படித்தேன்.. காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபடலாம் என ஆர்வமாக உள்ளது
சந்துரு. உறையூர்
- ஆதார் கார்டு, பான் கார்டு, அஞ்சல் சேவை போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து தெளிவாக எடுத்துரைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
கண்ணன், சமயபுரம்
- “ஜீரோ முதலீடு அதிக லாபம்“ என்ற தலைப்பே படிக்கத் தோன்றியது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வியாபாரத்தில் அவசியமான ஒன்றாகும். இதைப் பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
மகேந்திரன், எ.புதூர்
- ‘பிசினஸ் திருச்சி’ இதழில், வளர்ந்து வரும் சிறு தொழில் முனைவோர்களை அறிமுகப்படுத்துவது மிகச் சிறப்பு. இது அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மகேஷ், லால்குடி
- வீட்டில் இருந்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கப் சாம்பிராணி தொழில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை.
சாந்தி, கருமண்டபம்