மென்மையான இலவம்பஞ்சில் நிம்மதியான தூக்கம் கே.எஸ் அண்டு சன்சின் சிறப்பு விற்பனை
உழைத்துக் களைத்த மக்களுக்கு சுகமான தூக்கம் தான் அடுத்து நாளில் அவர்களை உற்சாகமாக வேலை செய்ய வைக்கும். பல ஆயிரங்கள் செலவு செய்து வாங்கிய மெத்தையோ உடல் வலியை அதிகப்படுத்தி தூக்கத்தின் பலனை வீணடித்து விடுகிறது. காரணம் கட்டிலில் வைக்கப்பட்டுள்ள மெத்தையின் தரம். நிம்மதியான உறக்கமே ஆரோக்கியமான உடலுக்கு அச்சாணி. சுகமான தூக்கம் வேண்டுமென்றால் மெத்தை தரமான இலவம் பஞ்சால் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, “முதுகு வலி உள்ளவர்கள் இலவம் பஞ்சால் செய்யப்பட்ட மெத்தையில் உறங்கினால் மட்டுமே வலி நீங்கும்” என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இலவம் பஞ்சு மெத்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைக்கும்.
“உடல் நலத்தை காக்கும் இலவம் பஞ்சு மெத்தைக்கான இலவம் பஞ்சினை எங்கள் தோட்டத்தில் பயிரிடப்பட்ட பஞ்சை கொண்டே, அதாவது கலப்படமற்ற தூய இலவம் பஞ்சினை பயன்படுத்தி மெத்தை செய்து தருகிறோம்” என்கிறார் பாரம்பரியமாக மெத்தை விற்பனையில் முன்னணி வகிக்கும் கே.எஸ்.&சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன். இலவம் பஞ்சு மெத்தை குறித்து அவர் நம்மிடம் கூறுகையில்,

“மெத்தை விற்பனையில் எங்கள் தாத்தா குமாரசாமி தான் எங்களுடைய முன்னோடி. தாத்தாவிடமிருந்து அப்பா கற்றுக் கொண்டார். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். தற்பொழுது என் மகன் எம்.பி.ஏ. முடித்து விட்டு இந்த தொழிலை செய்கிறார். நான்காவது தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். தாத்தா காலத்தில் காவி துணியில் இலவம் பஞ்சு கொண்டு மெத்தை, தலையணை உள்ளிட்டவைகளை செய்தார். பின்னர் வெல்வெட் துணியில் செய்தோம். தற்பொழுது மும்பையில் இருந்து துணி இறக்குமதி செய்து தரமான துணிகளில் மெத்தை செய்து தருகிறோம்.
வீடியோ லிங்:
பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இன்று வரையில் மெத்தையை கையிலேயே தைக்கிறோம். இதனால் வேறு எந்தக் கடைகளிலும் இல்லாத வகையில் எங்களுடைய மெத்தைகளில் மட்டும் பினிஷிங் சரியாக இருக்கும். இதுவே எங்களின் தனிச்சிறப்பாக, நான்கு தலைமுறைகளாக இன்றும் தொடர்கிறது.
ஆரம்பத்தில் ‘க்ஷி’ வங்கி என்ற டைப்பில் மெத்தைக்கு நடுவே வடிவங்கள் அமைந்திருக்கும். தமிழகத்தில் முதன்முறையாக அதை சதுர வடிவில் மாற்றியவர் எங்கள் தாத்தா தான். சதுர வடிவில் இருக்கும் பொழுது இலவம் பஞ்சு எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும். இதனால், மெத்தையில் இருந்து பஞ்சு வெளியே வராமல் இருக்கும். முதுகு வலி உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் வலி இருக்காது. இவை, அனைத்தை காட்டிலும் முக்கியமான விஷயம் இந்த வடிவிலான மெத்தையின் ஆயுட்காலம் என்பது 10 ஆண்டுகள் வரை இருக்கும். நாங்கள் எப்படி பரம்பரையாக இந்த தொழிலை செய்கிறோமோ அதேபோல் எங்கள் வாடிக்கையாளர்களும் பரம்பரை பரம்பரையாக எங்களிடம் வருபவர்களாக இருக்கிறார்கள். தாத்தா காலத்திலிருந்து எங்களிடம் மெத்தை வாங்குகிறார்கள்.
“தொழிலாக மட்டும் இதை கருதாமல் ஒரு சேவையுடன் இதை செய்தால் மட்டுமே தொடர்ந்து நிலைக்க முடியும். மக்களின் நன்மதிப்பையும் பெற முடியும் “ என் தந்தை என்னிடம் கூறுவார். அதை இன்று வரை செய்து வருகிறோம். என் மகனுக்கு நான் அதையே கற்றுக் கொடுக்கிறேன். இன்று வரையில் எங்களிடம் மெத்தை வாங்கி சென்றவர்கள் எந்தவித குறையும், குற்றச்சாட்டும் சொன்னதில்லை. தொடர்ந்து எங்களிடமே ஆர்டர் தருகிறார்கள். எங்கள் மெத்தைக்கான இலவம்பஞ்சு எங்கள் தோட்டத்தில் பயிரிடப்பட்ட இலவம் பஞ்சை கொண்டே செய்வதால், கலப்படமற்ற தூய இலவம் பஞ்சு கிடைக்கிறது. மெத்தையில் அமரும் பொழுது அதை வாடிக்கையாளர்கள் உணர முடியும். குறைந்த அளவிலேயே செய்தாலும் எந்த சமரசமும் இன்றி தரமாக செய்ததால் மட்டுமே இன்று எங்களுக்கான பெயரை நாங்கள் தக்க வைத்துள்ளோம். ஆரம்பத்தில் ஐந்து பேருடன் தொடங்கிய எங்களது நிறுவனம் தற்போது 20 பேர் வேலை செய்யும் அளவிற்கு, ஸ்ரீரங்கத்திலேயே மூன்று ஷோரூம்களுடன் வளர்ந்துள்ளது.
வீடியோ லிங்:
மெத்தை, சோபா குசன், கல்யாண மெத்தை, தலையணை உள்ளிட்டவைகள் எங்களது சொந்த தயாரிப்பு என்பதால் எங்களால் மக்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்க முடிகிறது. எங்களிடம் ரூ.1,500 முதல் ரூ.40,000 வரையிலான விலையில் மெத்தை மற்றும் தலையணை பொருட்கள் கிடைக்கின்றன. தற்போது, என்னுடைய மகன் எங்களின் தயாரிப்புகளை பிராண்டட் பொருளாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார்.
தொடர்புக்கு: 94431 24055