சூரியஒளி மின்சக்தி மூலம் ரூ.40,000 வருமானம் ஈட்டலாம்
திருச்சி மாவட்டத்தில் மத்திய மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வழிமுறைகளுக்கு சோலார் பம்ப் அமைப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு ஏற்படும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும் திட்டத்திற்கான செலவு ஒரு விவசாயிக்கு ரூ.5 லட்சம் ஆகும்.
இத்திட்டத்தை மத்திய அரசு 30% மற்றும் மாநில அரசு 30% மானியம் வழங்குகிறது. விவசாயின் பங்களிப்பு 40% தொகையாக இரண்டு லட்சம் ஆகும். இத்திட்டத்தில் ஏற்கனவே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது எந்த வகையிலும் தண்டிக்கப்பட மாட்டாது. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது.
விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தியது போக சூரிய ஒளி மின்சாரமானது கணக்கிடப்பட்டு அதனை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து அதற்கான தொகையை மாதந்தோறும் கணக்கிடப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் அரசு மானியம் 60% போக 40 சதவீத தொகையை விவசாயிகள் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விண்ணப்பப்படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல் ஆகிய ஆவணங்களை உதவி பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி என்ற முகவரியில் வழங்கலாம். மேலும் இணைய தளம் மூலமும் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.