நகைக்கடனை வசூலிக்க சட்டபூர்வ நடவடிக்கை
தமிழக கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;
“குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஆதார் எண் அடிப்படையில் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு மேல் நகைக் கடன்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும், வெவ்வேறு மாவட்டங்களில் நகைக் கடன் பெற்றுள்ளனர். எனவே, 40 கிராமுக்கு (5 பவுன்) மேல் நகைக் கடன் பெற்றவர்களின் கடன் தொகையை விரைவாக வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தவணை தவறி இருந்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, தொகையை வசூலிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.