Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அதிரிபுதிரியாய் வளரும் ரிலையன்ஸ்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அதிரிபுதிரியாய் வளரும் ரிலையன்ஸ்..!

2020-ம் ஆண்டில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கத்தையும், முதலீட்டையும் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து ரூ.2 லட்சம் கோடி அளவிலான முதலீட்டைத் திரட்டியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக், கூகுள், குவால்கம், இன்டெல் என உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ததன் மூலம் உலக நாடுகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் ஜியோ பிரபலமாகியுள்ளது.  ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம் அர்பன் லேடர் ஹோம் டெக்கார் நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை ரூ.182.12 கோடிக்கு கைப்பற்றியது. இதோடு வர்த்தக வளர்ச்சிக்காக ரூ.75 கோடி முதலீடு செய்யவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் ரீடைல் சந்தையில் பர்னிச்சர் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் Breakthrough energy ventures II , நிறுவனத்தில் சுமார் 50 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அடுத்த 8 முதல் 10 வருட காலத்தில் பல பகுதிகளாக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான மெட்பிளஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான விடாலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளையும், தனது 4 கிளை நிறுவனங்களில் 100 சதவீத பங்குகளையும் ரூ.620 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் விடாலிக் ஹெல்த் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் 2024-ம் ஆண்டுக்குள் 80 சதவீத பங்குகளையும், வர்த்தகச் சூழ்நிலையைப் பொறுத்து 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஸ்ரீ கண்ணன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் ரூ.152.5 கோடிக்கு கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ். இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் ரீடைல் மிகப்பெரிய அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சாவன் நிறுவனத்தின் 83.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய ரிலையன்ஸ், கடந்த பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக 10.9 சதவீத பங்குகளைக் கைப்பற்றிச் சாவன் நிறுவனத்தில் தனது பங்கு இருப்பை 94.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரிலையன்ஸ்.

ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆடை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் ஆடம்பர ஆடை வடிவமைப்பு நிறுவனமான Future 101 design private limited நிறுவனத்தில் ரூ.2 கோடி முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றி மொத்த பங்கு இருப்பு அளவு 17.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரூ.1 முகமதிப்புக் கொண்ட 115,32,00,000 பங்குகளைக் பெற்று இந்நிறுவனத்தின் 40.01 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் JM Financial Asset Reconstruction company limited  சுமார் 34.99 சதவீத பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் தனது reliance நிறுவனத்தின் வாயிலாக அமெரிக்காவில் இயங்கும் skytran Inc நிறுவனத்தில் சுமார் 17.37 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் 2019ல் கைப்பற்றிய பங்குகளுடன் சேர்த்து இந்நிறுவனத்தின் 26.31 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.