மீண்டும் தலைதூக்கும் பேடிஎம்
பேடிஎம் நிறுவன பங்குகள் 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. அந்த நிறுவன பங்குகள் இன்ட்ரா டேவில் 544 ரூபாயாக உயர்ந்தது. பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக அந்நிறுவன இயக்குநர்கள் திட்டம் வகுத்த நிலையில் பேடிஎம் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
கடும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த பேடிஎம் நிறுவ னம் 200 மில்லியன் டாலரை செலுத்த அவகாசம் அளிக்கப் பட்டுள்ள நிலையில் அந்நிறுவன இயக்குநர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் பேடிஎம் நிறுவன பங்குகள் மதிப்பு 60% சரிந்துள்ளது.
முதலில் ஒரு பங்கின் விலை ஆயிரத்து 950 ரூபாய் என்று வகுத்த பேடிஎம் நிறுவனம் 72%சரிவை சந்தித்து 532 ரூபாயாக விற்கப்படுகிறது. பைபேக் வசதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பேடிஎம் நிறுவனத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியுள்ளது. இதனால் வரும் வாரங்களில் பேடிஎம் நிறுவன பங்குகளின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பேடிஎம் நிறுவனத்தில் அதிகம் முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதல பாதாளத்தில் இருந்த பேடிஎம் நிறுவன பங்குகள் எழுச்சி கண்டுள்ளன.