வீடு வாங்க சரியான நேரம்….
வீடு, மனை பார்க்கச் செல்வதாக இருந்தால் பெரும்பாலும் மழை நேரத்தில் செல்வது சரியாக இருக்கும். அப்போது தான் அந்த இடத்தில் மழைநீர் தேங்குகிறதா என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியவரும்.
நீங்கள் ஓர் இடத்தில் மனை வாங்கப் போகிறோம் என முடிவு செய்தால் அந்த இடத்தைக் கூடியவரையில் முன்கூட்டியே பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
மழை காலத்தில் பார்க்க முடியவில்லை என்றால் அந்த மனை அல்லது வீடு அமைந்திருக்கும் இடத்துக்கு தனியே சென்று மழை நேரங்களில் தண்ணீர் தேங்குமா என்பதை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.