தங்கநகையில் முதலீடு… யாருக்கு நல்லது?
பல காரணங்களால் எதிர்வரும் நாள்களில் தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர, பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். திருமணத் தேவைகளுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்போதே வாங்கி வைக்கலாம்.
அதாவது தங்க நகைகள் வாங்குவதற்கான உடனடித் தேவை இருப்பவர்கள் இப்போதுள்ள விலையில் கொஞ்சம் தங்கத்தை வாங்கிவிடுவது சரியான முடிவாகவே இருக்கும்.
தங்க நகைகள் வாங்குவது உடனடித் தேவை இல்லை. 15, 20 ஆண்டுகள் கழித்து வாங்கினால் போதும் என்பவர்கள், தங்க நகை வாங்கும் பணத்தை கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.
கோல்டு பாண்டுகளிலும் பணத்தை முதலீடு செய்வது சிறந்த யோசனையாகவே இருக்கும். இதனால் தங்கத்தின் விலையேற்றத்தை நம்மால் எளிதாகச் சமாளிக்க முடிவதுடன், செய்கூலி, சேதாரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தங்க நகைகளைப் பத்திரமாக வைத்துப் பாதுகாப்பது என்கிற பிரச்சனையும் இருக்காது என்பதால், இந்த முதலீட்டை நிச்சயம் பரிசீலிக்கலாம்!