ரோட்டரி சேவைகளின் வணிகர் சங்கம் (RMBF) நிர்வாகிகள் பதவியேற்பு விழா
திருச்சியில், ரோட்டரி சேவைகளின் வணிகர் சங்க, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. 2001 நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவினை ரோட்டரி மாவட்டம் 3000 ரோட்டரி ஆளுநர் ஜெரால்டு (2022-2023) பதவியேற்று வைத்தார்.
தலைவராக கேசவன், துணைத் தலைவராக பார்த்தசாரதி, செயலாளராக கீர்த்தி, பொருளாளராக விஜய் நந்தகுமார் , ஆலோசகராக பெலிக்ஸ்ராஜ், சங்க வளர்ச்சி இயக்குனராக டேவிட் தம்புராஜ், தொழில் மேம்பாட்டு இயக்குனராக ராமகிருஷ்ணன், சங்க சேவை இயக்குனர் விவேகானந்தன், தொழிற் பயிற்சி இயக்குனர் வடிவேல், வருகை பதிவு இயக்குனர் கனகராஜ், நிகழ்ச்சி இயக்குனர் முஹம்மது நாசர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர். ரோட்டரி சேவைகளின் வணிகர் சங்கம் திருச்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.