Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் தொழில்முனைவோருக்கான வங்கி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியில் தொழில்முனைவோருக்கான வங்கி

வங்கிக் கடன்..!
சராசரி மனிதனின் மேம்பாட்டிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவுவதோடு மட்டுமின்றி நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் வங்கிக் கடனே பெரும் பங்கு வகிக்கிறது.
சாமானிய மனிதனின் மனதில் உருவாகும் புதிய சிந்தனைகளுக்கு தொழில் வடிவம் கொடுப்பதில் பொதுத் துறை வங்கிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்து வருகின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.

குறு, சிறு என்றளவில் தொடங்கப்பட்ட ஏராளமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் கால் பதிக்கும் அளவிற்கு பெரும் நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றதற்கான அடிநாதமாக வங்கிக் கடன் விளங்குகிறது. வங்கிக் கடன் மூலம் வளர்ச்சி பெற்ற நிறுவனங்கள் ஏராளம் உண்டு என்பது போல், கடன் கிடைக்காமல் ஏராளமான புதிய சிந்தனையாளர்கள் சொந்தத் தொழில் தொடங்க வாய்ப்பின்றி ஏதாவது ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு செல்லும் சூழலும் இங்கே உண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வங்கியில் கடன் தருகிறார்கள் என்றால் அந்தப் பணம் அந்த வங்கியின் மேலாளருடையது அல்ல. நாம் வாங்கும் தொழில் கடனை திருப்பி செலுத்தாது போனால் வங்கி நிர்வாகம் பெரும் பொருளாதார சிக்கலை சந்திக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டே வங்கி மேலாளர்கள் பல்வேறு சோதனைகளுக்கு ஆட்படுத்துகிறார்கள்.
தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத் தான். வங்கி மேலாளரின் மனதில் நம்பிக்கையை முழுமையாக விதைத்து விட்டால் கடன் பெறுவது நிச்சயமாகிவிடுகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வங்கி மேலாளரிடம் ‘நம்பிக்கை’ பெறுவதற்கான காரணிகள் என்னென்ன.? முதலில் ஒரு திட்ட அறிக்கை. உங்கள் திட்ட அறிக்கையை படிக்கும் வங்கி மேலாளர் அதில் அவருக்குள்ள சந்தேகங்களை (அவருக்கு அந்த தொழில் குறித்த அறிவு இல்லையென்றாலும், தொழில் முனைவோர் கடனை திரும்ப செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்ற அடிப்படையில்  தான் அவரின் கேள்வி அமையும்) கேட்டுத் தெளிவு பெறுவார். அதில் சில கேள்விகள் உங்களை எரிச்சலூட்டலாம். ஆனால் கடன் பெற முனையும் தொழில் முனைவோர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கியால் கவனிக்கப்படுகிறது என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

வங்கியின் பல்வேறு நிர்வாக நடைமுறைகளுக்கு மத்தியில் தான் தொழில்முனைவோரையும் வங்கி மேலா ளர் அணுகுகிறார். வங்கி மேலாளருக்கு வேலைபளு காரணமாக ஏற்படும் மன உளைச்சலும் கூட உங்களுக்கு கடன் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன.  இத்தகைய இடர்பாடுகளை களைய, புதிய சிந்தனைகளுடன் தொழிலில் ஈடுபட முனையும் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட தொழில் மையம், டிடிட்சியா உள்ளிட்ட ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன.  கடன் பெற முனையும் தொழில்முனை வோரை தொழில் மையம் முழுமையாக ‘பரிசோதனை’ செய்துவிடுவதால் வங்கி மேலாளரின் பணிச்சுமை பெருமளவு குறைகின்றன. கடன் பெறுவதும் எளிதாகிவிடுகிறது. இத்தகையதொரு அணுகுமுறை தான் இன்று நாட்டில் ஏராளமான புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பளித்திருக்கிறது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

தொழில்முனைவோருக்குள்ள இடர் பாடுகளை களைந்து அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கிட வங்கிகளும் பல்வேறு புதிய புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில், வங்கி வர்த்தகத்தில், முதன்முறையாக, புதிய, எளியதொரு நிர்வாக நடைமுறையினை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
அது என்னவிதமான நடைமுறை என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியை பற்றியும் நாம் முதலில் அறிந்து கொள்வோம்.

1895ம் ஆண்டு லாகூரில், ஏப்ரல் 12 அன்று ரூ.2 லட்சம் முதலீட்டில் இந்தியாவில், இந்தியர்களால், தொடங்கப்பட்ட முதல் சுதேசி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி. சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் நடைமுறையினை நாம் அறிந்து வருகிறோம். அந்த வகையில், 2019—–&20 நிதியாண்டில் ஓரியண்டல் வங்கி மற்றும் யூனைடெட் வங்கி ஆகிய இரண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. இதையடுத்து இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி.
வங்கி ஒருங்கிணைப்பை தொடர்ந்து வங்கியின் மண்டல நிர்வாக அலுவலகம் 13லிருந்து 24ஆகவும், 76 வட்டார அலுவலகம் 161 ஆகவும் உயர்த்தப்பட்டன. கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, ரூ.17,86,671 கோடி வர்த்தகத்துடன், நாடு முழுக்க 10930 கிளைகளுடன், 13878 ஏ.டி.எம். வசதியுடன் செயல்பட்டு வருகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி.

“இணைப்பைத் தொடர்ந்து வங்கிக் கடன் வழங்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு விதமான செயல்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டன” என்கிறார்கள் புதிய மையத்தின் தலைவரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணைப் பொது மேலாளருமான கிரிஷ் நாயர் மற்றும் திருச்சி வட்டார அலுவலக தலைவர் ஆர்.புஷ்பலதா ஆகிய இருவரும்.
திருச்சி, கண்டோன்மெண்ட், ஹீபர் சாலையில் உள்ள ஆர்.ஏ.ஆர்.ஆர்கேடு கட்டடத்தில், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இம்மையம் குறித்து அவர்கள் நம்மிடம் கூறுகையில்,
“இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, small and Medium enterprises MSME) தான் அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே நாட்டின் 45 சதவித வேலைவாய்ப்பினை பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதியில் 50 சதவீத பங்களிப்பினை வழங்குகின்றன. இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன.

இவற்றை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தான் PLP-RAM மற்றும் MCC என இரண்டு விதமாக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடிக்கும் குறைவான கடன் வழங்கிட (அனைத்து சில்லறை கடன்கள், MSME மற்றும் விவசாய கடன்கள் வழங்கிட 135 கடன் மையங்களும் (PLP-PNB Loan point-RAM-Retail Agri MSME), ரூ.1.00 கோடிக்கும் மேலான கடன்களுக்கென (அனைத்து வேளாண்மை, MSME அல்லாத கடன்களுக்கு) 117 மத்திய நிறுவன மையமும் (Mid corporate centre – MCC) பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோட்டை அடுத்து திருச்சியில் ரூ.1.00 கோடிக்கும் மேலான கடன்களுக்கென இந்த புதிய மையம் (MCC) தொடங்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் மத்தியில், பொதுத் துறை மற்றும் ஏராளமான தனியார் துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாக திருச்சி மாவட்டம் உள்ளது. மேலும் இங்கே, வேளாண், உணவு மற்றும் இன்ஜினியரிங் தொழில் சார்ந்த ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கான தொழில் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தான் எங்களது வங்கி இம்மையத்தை திருச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் எங்களுக்கு 16 கிளைகள் உள்ளன. கிளை வங்கி மேலாளர்கள் பல்வேறு நிர்வாக பணிகளில் ஈடுபடுவதால் அவர்களை அணுகி தொழில் அபிவிருத்திக்கான கடன் பெறுவதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  இவற்றை களையும் வகையில். தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் அபிவிருத்திக்காக கடன் பெற கிளை அலுவலகத்தை அணுக வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் மையத்தை அணுகினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்து தருகிறோம்.

அதாவது, கடன் விண்ணப்பத்தை ஆராய்ந்து கடனுக்கான பரிந்துரை செய்வ தோடு எங்களது பணி முடிந்துவிடுவதில்லை. தொழில் அபிவிருத்திக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கி உத்தரவாத சான்றிதழ் வழங்குவது, Letter of Credits, ஆண்டு வரம்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விதமான நடைமுறை பணிகளுக்கும் உதவிகரமாக செயல்படுகிறோம்.  ரூ.10 கோடி வரை கடன் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும்
இங்கேயே நாங்கள் செய்து தருகிறோம். ரூ.10 கோடிக்கும் மேலான கடன்களுக்குரிய பரிசீலக்கப்பட்ட விண்ணப்பங்களை, சென்னையில் உள்ள மண்டல அலுவலகம் மற்றும் புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி நாங்க ளே கடன் அனுமதி பெற்றுத் தருகிறோம். கடன் பெறும் நிறுவனங்கள் அவர்களின் வரவு செலவுகளை வழக்கம் போல் அவர்களது கிளைகளிலேயே தொடரலாம்.

குறிப்பாக, எங்கள் வங்கியில் MSME கடனுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது. தொழில் அபிவிருத்திக்கென தனியார் வங்கிகளில் கூடுதல் வட்டிக்கு கடன் பெற்றிருந்தால் அவர்கள் தங்களது கடன் கணக்கை எங்களது வங்கிக்கு மாற்றிக் (Take over) கொள்ளலாம்” என்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் MCC மையத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்களின் கடன் தேவைகள் குறித்து கலந்தாலோசிக்க மைய உயர் அதிகாரியை தான் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறையை களைந்து, வாடிக்கையாளரின் நேரத்தை உணர்ந்து, ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து உரையாட தேர்ந்த கடன் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது இம்மையத்தின் சிறப்பம்சமாகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.