ரூ.90,000 கோடி காப்பீட்டு தொகை
2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 13ம் தேதியுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது. இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பொது முடக்க காலத்தில் கூட ரூ.8,741.30 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 70 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.