கல்வி உதவித்தொகை : கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் செயல்படும் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு 2020&21ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இவர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்பு கட்டிடம், சேப்பாக்கம், சென்னை, போன்: 044-&28551462, மெயில்:tngovtitischolarship@gmail.com, மூலமோ அல்லது திருச்சி கலெக்டர் அலுவலகத்திலோ விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் தர வேண்டும். கல்வி நிறுவனங்களும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.