பாரத ஸ்டேட் வங்கி, கிரெடிட் மதிப்பெண் அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு வந்ததை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக்கடன் பெறுவோர் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கடன் பெற்றோரின் சிபில் மதிப்பெண்ணுக்கு ஏற்ப இந்த வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும் எனவும் எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்து இந்தச் சலுகையைப் பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை 8 மெட்ரோ நகரங்களில் ரூ.3 கோடி வரை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது. யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால் அனைத்து விதமான வீட்டுக்கடன்களுக்கும் கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.