எலும்பும் கறியுமாக 2 கிலோ அனுப்புங்க… சுகாதாரமான பேக்கிங்.,.! ஒரு செயலி போதும்..!
நமது நாட்டில் புதிதான ஸ்டார்ட்அப் கம்பெனிகள் சில குறைவான சர்வீஸ் சார்ஜ் பெற்று புதிதான சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதார முறையில் பேக்கிங் செய்து வீட்டுக்கே டெலிவரி செய்கிறார்கள். இவ்வகை பிசினஸ் நமது நாட்டில் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே நடக்கிறது.
இந்தியாவில் மாமிச உணவு மார்க்கெட்டின் மதிப்பு ஆண்டிற்கு ரூ,22,10,000 கோடியாகும். இத்துறை ஆண்டுக்கு 20 சதவீதம் வரை வளர்கிறது. நீங்களும் ஒரு செயலி, இணையதளம் மற்றும் சுகாதாரமான. கலக்கான பேக்கிங் முறை கொண்டு இவ்வகை பிசினசை மேற்கொள்ளலாம். இதனால் கை நிறைய வருமானம் பெறலாம்.
மேலும் நீங்களே தமிழகம் முழுவதும் சங்கிலி தொடர் கறிக்கடைகளை ஆரம்பிக்கலாம். நேர்த்தியான உள்அலங்காரத்துடன் கடைகளை வடிவமைத்து புதிய ஐடியாவுடன் செயல்பட்டால் இத்தொழிலில் சாதிக்கலாம்.
அதிகமான ஆடு, கோழிகள் தேவை ஏற்படின் அருகிலுள்ள கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அவர்களுக்கும் நிரந்தர வருமானம் பெற வழி வகுக்கலாம். தரமான ஆடுகள், நாட்டுக் கோழிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த வியாபாரத்திற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.