அப்பா வாங்கிய கடனை மகன் கட்டியே ஆக வேண்டுமா? சட்டம் என்ன சொல்கிறது?
பொதுவாக அப்பா வாங்கிய கடனுக்கு மகன் தான் பொறுப்பு என்று சமூகத்தில் கூறிக் கொண்டு வந்தாலும் சட்டத்தில் அப்படி எந்தவிதமான ஷரத்துக்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத் தம் கொண்டு வரப்பட்டது. அந்த திருத்தத்தில் அப்பாவின் சொத்துக்களை மகன் எந்த அளவுக்கு பெறுகிறாரோ அந்த சொத்துக்கள் மீது ஏதாவது கடன் இருந்தால் மட்டுமே மகன் பொறுப்பாவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அப்பா வங்கியில் கடன் வாங்கி இறந்துவிட்டால் அந்த வங்கி கடனை அவரது மகன் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வங்கி மகனிடம் கடனை கேட்க எந்த உரிமை இல்லை.
அப்பா வாங்கிய கடன் அப்பா வங்கிக் கடன் வாங்கும்போது அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவர் தான் அப்பாவின் கடனுக்கு பொறுப்பாளர். அல்லது ஏதேனும் சொத்துக்கள் மீது அப்பா அடமானம் வைத்திருந்தால் அந்த சொத்துக்களை விற்று கடனை எடுத்து கொள்ள வங்கிக்கு உரிமை இல்லை. ஆனால் வாரிசுதாரர்களிடம் வங்கிகள் கடனை கேட்கக்கூடாது என்றுதான் சட்டம் கூறுகிறது.
மகன் பொறுப்பா? வங்கி மட்டுமின்றி தனியாரிடமும் அப்பா கடன் வாங்கி இருந்தார் அதை மகன் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அப்பாவின் கடனுக்கு மகன் ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தால் மட்டுமே மகன் பொறுப்பாவார். அவ்வாறு ஜாமீன் கையெழுத்து போடவில்லை என்றால் மகனிடம், கடன் கொடுத்தவர் கேட்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றுதான் சட்டம் கூறுகிறது.
அப்பாவின் சொத்து ஆனால் அதே நேரத்தில் அப்பாவின் சொத்தில் மகனுக்கு எந்த அளவுக்கு உரிமை உண்டோ அந்த அளவுக்கு கடன் இருந்தால் அந்த சொத்துக்களை கடன்காரர்கள் வழக்கு போட்டு பெற்றுக்கொள்ள அதிகாரம் உண்டு. உதாரணமாக அப்பாவிடம் இருந்து மகனுக்கு 20 லட்ச ரூபாய் சொத்து கிடைத்திருந்தால், அந்த சொத்தின் மீது ரூ.10 லட்சம் கடன் இருந்தால், அந்த சொத்தின் மீதான கடனுக்கு மகன் தான் பொறுப்பு. ஆனால் அதே நேரத்தில் சொத்து பிரிக்கப்பட்ட பின்னர், தந்தை கடன் வாங்கியிருந்தால் அந்தக் கடனுக்கு மகன் பொறுப்பாக மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் அப்பா எந்தவிதமான சொத்துக்களும் சேர்த்து வைக்காமல் கடன் வாங்கியிருந்தால் அந்த சொத்துக்கு மகன் எந்தவிதமான பொறுப்பும் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்பா தனக்கு எந்த சொத்தும் இல்லாமல் கடன் வாங்கியிருந்தால், மகன் சுயமான சம்பாதித்த சொத்துக்களில் இருந்து
கடனை கட்ட வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை என்று தான் சட்டம் சொல்கிறது. எல்.ஐ.சி கடன் சமீபத்தில் போபாலை சேர்ந்த வனிஷா என்ற சிறுமி தந்தையை கொரோனா நோயால் பறிகொடுத்த நிலையில், தந்தை வாங்கிய எல்ஐசி வீட்டுக் கடனை திருப்பி அளிக்கும்படி தொடர்ச்சியாக நோட்டீஸ் வந்தது என்பதும் அந்த நோட்டீஸ் குறித்து வனிஷா
டுவிட்டரில் பதிவு செய்த நிலையில் இந்த பிரச்சனையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக தலையிட்டு இதுகுறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.