நீங்களும் முதலாளியா உலா வர கைகொடுக்கும் சிறுதொழில்கள்!
என்னத்தான் படிச்சு முடிச்சிருந்தாலும், வேலை கிடைப்பது என்பது இன்று வரை குதிரை கொம்பாகவே உள்ளது. அப்படி மீறி தனியார், கார்பரேட் கம்பெனிகளில் மாத சம்பளத்திற்கு வேலை செய்தாலும், அவர்களின் குறைந்தபட்ச அடிமையாகவே நாம் மாறி விடுகிறோம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
பெரிய, பெரிய நிறுவனங்களில் குறைந்த சம்பளமே கிடைக்கும். அதை வைத்து மாதத்தை ஓட்டுவதே மிகவும் சிரமமான நிலை தான்.
இதற்கு தான் நாம் கொஞ்சம் மாத்தி யோசிக்கணும். நாமே முதலாளி ஆனா…
நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும் சரி, பகுதி நேர வேலை செய்பவராக இருந்தாலும் சரி, அல்லது வேலை தேடுபவராக இருந்தாலும் சரி சில வியாபார யோசனைகளால் நீங்களும் ஒரு தொழிலதிபர் ஆக முடியும். வியாபார ஐடியா பார்ப்போம் வாங்க…
நடமாடும் ஹோட்டல்
மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவை அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்றால் என்ன? என்ற ஐடியாதான் நடமாடும் ஓட்டல். ஒரு குறிப்பிட்ட இடங்களுக்குத் தொடர்ந்து சென்றால் இந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
குழந்தையைப் பாதுகாக்கும் சேவை
வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளைப் பாதுகாத்துப் பராமரிக்கும் வேலை என்பது ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்யும் தொழில் ஆகும். குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்ற இந்தத் தொழில் வீட்டில் இருந்து கொண்டே ஆயிரக்கணக்கில் எந்தவித முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க உதவும்
பகுதி நேர பணியாளர்
வீட்டில் இருந்து கொண்டே பகுதி நேர பணியாளராக வேலை செய்யப் பல இணையதளங்கள் வாய்ப்புக் கொடுக்கின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு இந்தத் தொழில் மிகவும் ஏற்றது.
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பது சாதாரண விஷயமல்ல. எனவே இதனை மொத்தமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் தற்போது ஒப்படைத்து விடுகின்றனர். எனவே இந்தத் தொழில் ஒரு சிறந்த தொழிலாகும்.
கேட்டரிங் தொழில்
திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்குச் சமைத்து பரிமாறும் தொழிலான இந்தத் தொழில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நல்ல உணவு, அருமையான பரிமாறும் திறமை உள்ளவர்களை வைத்து ஆரம்பிக்கப்படும் கேட்டரிங் நிலையங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் அருமையாகச் சமைக்கும் சமையல்காரர்களை உங்கள் தலைமையில் ஒருங்கிணைத்து இயக்கினாலும் நல்ல லாபம் கிடைக்கும்.
மனமகிழ் மையம்
இன்றைய பரபரப்பான உலகில் பலருக்கும் தேவைப்படுவது மனநிம்மதி. இதனைக் கருத்தில் கொண்டு மனதை ரிலாக்ஸ் செய்யும் மனமகிழ் மையத்தை ஆரம்பிப்பது ஒரு திருப்தியான தொழில் ஆகும்.
ஐஸ்க்ரீம் பார்லர்
ஐஸ்க்ரீமை விரும்பாதவர்கள் உலகில் உண்டா? குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பிடித்த இந்த ஐஸ்க்ரீம் பார்லரை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்
மளிகைக் கடை
அதிக முதலீடு இல்லாத, அதிக அனுபவம், அறிவு தேவைப்படாத ஒரு தொழில் ஒரு பெட்டிக்கடை வைப்பது. சின்னப் பெட்டிக்கடையில் ஆரம்பித்துப் பின்னர்க் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் பெற்றுப் பின்னர்ப் பெரிய கடையாக விரிவுபடுத்தலாம்.
திருமண ஒருங்கிணைப்பாளர்
கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்பதெல்லாம் பழைய பழமொழி. தற்போது திருமணம் என்பது வெகு எளிதான விஷயம். மொத்த திருமண வேலையையும் திருமண ஒருங்கிணைப்பாளர் ஏற்றுக்கொண்டால் மாப்பிள்ளையும் பொண்ணும் வரவேண்டியது ஒன்றுதான் பாக்கி. இந்தத் திருமண ஒருங்கிணைப்பாளர் தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது.
மொபைல் கடை
மொபைல் என்பது மனிதனின் இன்றியமையாத தேவையாகிவிட்டது. எனவே ஒரு மொபைல் கடையை வைத்து அதில் லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன்களை அவ்வப்போது வரவழைத்து விற்பனை செய்தால் நீங்களும் ஒரு சிறந்த தொழிலதிபர்தான்.
உற்சாகமூட்டும் பேச்சாளர்
நீங்கள் பேச்சுத்திறமை உள்ளவரா? உங்கள் பேச்சால் மற்றவரின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியுமா? அப்படியென்றால் உங்களுக்கு இந்தத் தொழில் ஏற்றது.
ஆன்லைன் பிளாக்
நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர், கற்பனை வளம் மிக்கவர் என்றால் ஆன்லைனில் பிளாக் ஆரம்பித்து அதில் மக்களுக்குத் தேவையான கருத்துக்களைப் பதிவு செய்து வந்தால் கூகுள் ஆட் உள்ளிட்ட பல வருமானங்கள் உங்களைத் தேடி வரும்.
டேட்டா எண்ட்ரி பணி
எந்தவித டென்ஷனும் இல்லாமல் பார்க்கும் பணிகளில் ஒன்று டேட்டா எண்ட்ரி. பெரிய நிறுவனங்கள் பல இதற்கான வேலைவாய்ப்பைத் தருவதற்குத் தயாராக உள்ளதால் இந்தத் தொழிலும் ஒரு சிறந்த தொழில் ஆகும்.
விண்ணப்ப எழுத்தாளர்
வேலைக்குச் செல்பவர்களுக்குக் கவர்ச்சியான விண்ணப்பங்களைத் தயார் செய்து கொடுக்கும் இந்தத் தொழில் ஒரு நல்ல வருமானத்தைக் கொடுக்கும் தொழில் ஆகும்.
எஸ்.இ.ஓ ஆலோசகர்
இன்றைக்கு அதிகம் தேவைப்படும் ஒரு நபராக எஸ்.இ.ஓ உள்ளார். இணையதளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் இந்த எஸ்.இ.ஓ ஆலோசகர் ஒரு நல்ல தொழில். ஆனால் இந்தத் தொழிலை நன்கு அனுபவம் பெற்ற பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் அனைவரும் துவக்கத்தில் சிறிய அளவில் தொழில் செய்தவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
முயற்சியும், பயிற்சியும் இருந்தால், பணம் உங்களை தேடி வரும். வேண்டாம் மாதசம்பளம்.நீங்களும் முதலாளியா உலா வாங்க.